அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

பத்திக்கிச்சு வத்திக்குச்சியில்லாம குஷ்பு விவகாரம்


"திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு கொள்வதில் தவறு இல்லை'' என்று நடிகை குஷ்பு சொன்ன கருத்து தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அவர் மீது 32க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவருக்கு ஆதரவு தெரிவித்த நடிகை சுகாசினியும் எதிர்ப்புக்குள்ளானார்.

குஷ்புவின் செக்ஸ் கருத்து பற்றி கடந்த புதன்கிழமை டெல்லியில் நடந்த ஒரு விழாவில் பேசப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்ற பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடமும் குஷ்பு கருத்து பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சானியா மிர்சா, "செக்ஸ் உறவு என்பது திருமணத்துக்கு முன்பு என்றாலும் சரி அல்லது திருமணத்துக்கு பின்பு என்றாலும் சரி, அது மிகவும் பாது காப்பானதாக இருக்க வேண்டும்'' என்று கூறினார். குஷ்புவின் கருத்துக்கு ஆதரவளிப்பது போல அவர் பேசினார். இது அவருக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சானியா மிர்சாவின் சொந்த ஊரான ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நேற்று சானியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. ஐதராபாத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சானியாவை கண்டித்து கோஷ மிட்டனர்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பும் சானி யாவை கண்டித்து ஆந்திராவின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் "சானியா ஒழிக'' என்று கோஷ மிட்டனர். சானியா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

இன்றும் ஆந்திராவில் சில இடங்களில் சானியா மிர்சாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அப்போது சானியாவின் படங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. சிலர் சானியா படத்தை செருப்பால் அடித்தனர்.

ஐதராபாத்தில் சானியாவின் கவர்ச்சி உருவ பொம்மை தீ வைத்து கொளுத்தப்பட்டது. சானியாவின் குட்டை பாவாடை உடைக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் மதக் குருக்கள் தற்போது செக்ஸ் கருத்துக்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

முஸ்லிம் மதக்குரு ஒருவர் இதுபற்றி கூறுகையில், "திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவில் ஈடுபடலாம் என்று சானியா கூறினால், உண்மையில் அவர் முஸ்லிமே இல்லை என்றுதான் அர்த்தம். அவருக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்றார்.

சன்னி உலமா போர்டு பொதுச் செயலாளர் மவுலானா ஹசீபுல் ஹசன் சித்திக் கூறுகையில், "இஸ்லாமியத்தில், திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவில் ஈடுபடுவது பெரிய பாவமாக கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் ஆணோ அல்லது பெண்ணோ திருமணத்துக்கு முன்பு ஒன்றாக கலக்க இயலாது. செக்ஸ் பற்றி எல்லாம் பேசக் கூடாது.

ஒரு முஸ்லிம், திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதை கடைபிடித்தால் அவன் அல்லது அவள் இஸ்லாமிய மதத்தில் இருந்து விலக்கப்பட்டதாகத்தான் கருதப்படும்'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "சானியா உடை பற்றி நாங்கள் சொன்னபோது பலர் எங்களை எதிர்த்தனர். ஆனால் இன்று அவர்களே சானியாவின் செக்ஸ் பேச்சால் அதிருப்தி அடைந்துள்ளனர். சானியாவின் பேச்சு இஸ்லாம் மதத்துக்கு மட்டும் எதிரானது அல்ல.

இந்திய பண்பாட்டுக்கே எதிரானது. திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று வலியுறுத்தப்பட்டால் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்'' என்றார்.

ஐதராபாத்தில் உள்ள மற்றொரு இஸ்லாமிய மதக்குரு கூறுகையில், "இந்தியர்கள் உணர்வை சானியா மிர்சா காயப்படுத்தி விட்டார். இதற்காக அவர் எல்லாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்றார்.

ஐதராபாத்தில் ஒரு பள்ளியில் பணிபுரியும் சுபா என்ற ஆசிரியை கூறுகையில், "சானியா மிர்சாவின் செக்ஸ் உறவு கருத்து இந்திய இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடும். செக்ஸ் பற்றி பேசும் போது நமது பாரம்பரியத்தை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்'' என்றார்.

ஹமீது அகமது என்ற மாணவர் கூறுகையில், "சானியாவின் பேச்சு கண்டனத்துக்குரியது. திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு கொள்ளலாம் என்று அவர் சொல்லி இருப்பதன் மூலம் ஒவ்வொரு இஸ்லாமியரின் மனதை காயப்படுத்தி விட்டார்.

குஷ்பு ஒரு நடிகை. அவர் அப்படித்தான் பேசுவார். செக்ஸ் பற்றி அவர் சொன்ன கருத்து எங்களுக்கு அதிர்ச்சியை தரவில்லை. செக்ஸ் பற்றி நடிகைகள் பேசுவது பெரிய விஷயமாக எங்களுக்கு தெரிய வில்லை.

ஆனால் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா அப்படி அல்ல. இந்தியாவுக்கு பெருமை தேடி தருபவர். அவர் ஒரு நடிகை சொன்ன செக்ஸ் கருத்துக்கு வக்காலத்து வாங்கி இருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது'' என்றார்.

நிறைய பேர் மாணவர் ஹமீது அகமது போல எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மாலை மலர் செய்தி
அடுத்து உலகப்பிரச்சனை தான்

2மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger மூர்த்தி

குஸ்பூ பத்தவெச்சி சுகாசினி திரியைத் தூண்டிவிட்டு சானியா எண்ணெய் ஊற்றுகிறார்!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சானியா தற்போது பல்டியடித்துவிட்டார்
நன்றி மூர்த்தி

 

Post a Comment

<< முகப்பு