அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

ஒரு பூதத்தின் கதை

இருள் சூழ்ந்த காடு ஒன்றில் சாத்யகியோடும் அண்ணன் பலராமனோடும் வேட்டையாடிக் கொண்டிருந்தான் கண்ணன். வெகுநேரமானதால் இரவை காட்டிலேயே கழிக்க முடிவு செய்தனர்.
ஒரு மரத்தடியில் தங்கிய மூவரில் இருவர் உறங்க, ஒவ்வொரு ஜாமமும் ஒருவர் காவல் புரிய வேண்டும் என்ற திட்டப்படி கண்ணனும், பலராமனும் உறங்க முதல் ஜாமத்தில் சாத்யகி காவல் காத்தான். அப்போது அங்கு ஒருபூதம் தோன்றியது. அது சாத்யகியிடம் படுத்துத் தூக்கும் இருவரையும் கொன்று தின்ன உதவி கேட்டது. கோபமுற்ற சாத்யகி ஆவேசத்தோடு பூதத்தைக் கொன்று போட எண்ணமிட்டான் சாத்யகி கோபம் அதிகமாக அதிகமாக பூதத்தின் பலமும், ஆற்றலும் பெருகியது கடைசி வரையிலும் பூத்ததை அவனால் கொல்ல முடியவில்லை.
முதல் ஜாமம் முடிந்தது. பூதமும் மறைந்தது. இரண்டாம் ஜாமத்தில் சாத்யகி படுத்துக்கொள்ள பலராமன் காவல் செய்தான். அப்போதும் பூதம் தோன்றியது. பலராமன் பூத்தின் ஆற்றல் ரகசியம் தெரியாமல் கோபத்துடன் போரிட்டான். பூதத்தை வெல்ல முடியவில்லை. மூன்றாம் ஜாமம் தொடங்கியது. பூதம் சென்று மறைந்தது. கண்ணன் காவல் புரியத் துவங்கினான்.
அவன் முன்னாலேயும் பூதம் தோன்றியது. கண்ணன் அதைப் பார்த்து நகைத்தான். "எதற்காகச் சிரிக்கிறாய்?" என்று பூதம் கேட்டது. "உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில் நகைத்தேன்" என்றான். கோபத்துடன் பூதம் சண்டைபோட ஆரம்பித்தது. கண்ணனோ சிறிதும் கோபங்கொள்ளாமல் மோதினான். சினம் கொள்ளாத கிருஷ்ணனின் செய்கையால் பூத்தின் ஆற்றல் குறைந்தது. அவன் சிரிக்க சிரிக்க பூத்தின் உருவமும் இளைத்தது. பலமும் குறைந்து போய் இறுதியில் ஒரு புழுவாய் போனது. கண்ணன் அதைக் கச்சையில் எடுத்து முடிந்து கொண்டான். பொழுது விடிந்தது. சாத்யகியும், பலராமனும் தாங்கள் இரவு காவலுக்கிருந்தபோது பூத்துடன் நடந்த பேரைப் பற்றி கூறினர். கண்ணன் தன் கச்சையில் முடித்திருந்த புழுவை அவர்களிடம் காட்டி," நீங்கள் போரிட்ட பூதம் தான் இது" என்றான்.
தான் காட்டிய புழுவைப் பார்த்துத் திகைத்துப் போன் அவர்களிடம், "சினம்தான் இதன் ரூபத்தில் வந்தது. உங்கள் சினம் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவு இதன் பலமும், அளவும் அதிகரிக்கும். இதனுடன் அன்பாய் சிரித்துக் கொண்டே நான் சண்டையிட்டதால் இதன் தோற்றமும், வலிமையும் குறைந்து போய் புழுவாய் சிறுத்துப்போக வைத்துவிட்டது" என்றான்.
இக்கதை நமக்கு கோபத்தின் தீமையை போதிக்கிறது அல்லவா? ஆம் நல்வழிப்படுத்தும் போதனையே, கண்ணனின் செய்கள்யாவும்.

கிருஷ்ணா அர்ப்பணம்

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு