அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மனிதன் இருக்க வேண்டிய முறைகள்

மனிதன் எப்போதும் தூங்காமலிருக்க வேண்டும்
  1. எப்போதும் அமிர்த்ததைச் சாப்பிட்டுக் கொண்டு, காயத்திரியை ஜபித்தபடி இருக்கவேண்டும்
  2. எப்போதும் சத்தியமே பேச வேண்டும்
  3. எப்போதும் பரிசுத்தனாக இருக்க வேண்டும்
  4. எப்போதும் பிரம்மசாரியாக இருக்க வேண்டும்
  5. எப்போதும் மிச்சத்தையே சாப்பிட வேண்டும்
இது எங்ஙனமெனில்:
  1. பகலில் தூங்காதவன் தூக்கத்தை விட்டவனாவான்
  2. விருந்தினர்கள் வேலைக்காரர்களெல்லாம் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுபவன் அமிர்தத்தைச் சாப்பிடுவனாவான்.
  3. கொடுப்பதைத் தன் இயலபாகக் கொண்டமனிதன் எப்போதும் உண்மை பேசுகிறவனாவான்.
  4. தானம் கொடுப்பவன் பரிசுத்தனாகிறான்.
  5. ருது காலத்தில் மட்டும் தன் மனைவியைச் சேருகிறவன் பிரம்மசாரியாகிறான்.
  6. தேவ பூஜை நைவேத்தியங்கள், பித்ரு காரியங்கள் செய்த பிறகு, மற்றவர்களுக்கு அளித்து, பிறகு சாப்பிடுபவன் மிச்சத்தை சாப்பிட்டவனாகிறான்.
இத்தகைய வர்களுக்கு பிரம்ம லோகத்தில் முடிவற்ற இடங்கள் இருக்கின்றன.
பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு பல தர்ம விஷயங்களைக் கூறிவரும் போது. இடையில் சுக்ராச்சாரியர் பலிச் சக்ரவர்த்திக்குக் கூறியவை இவை என்று கூறி அவற்றை எடுத்துச் சொல்கிறார்.

இதையே போராசிரியர் ராதாகிருஷ்ணன் சொன்னார்
  • படுத்து தூங்காதீர்கள்
  • தாயருக்கு செலவுக்கு பணம் கொடுக்காதீர்கள்
  • தேர்வுக்குப் படிக்காதீர்க்ள்
அது இது தான்
  • தூக்கம் வந்த பின் படுத்துக்கொள்ளுங்கள்
  • தாங்கள் வாங்கிய சம்பளத்தை தாயாரிடம் கொடுத்து அவரிடம் உங்கள் தேவைக்கு வாங்கிக்கொள்ளுங்கள்
  • தேர்வுக்கு முன்னரே படித்து விடுங்கள்
என்று சொன்னார்

1மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger நல்லவன்

நன்றாக உள்ளது

 

Post a Comment

<< முகப்பு