அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

இந்தியர் அமெரிக்காவில் கைது

ராடாரை ஏமாற்றி பறக்கும் நவீன தொழிநுட்பம் கண்டு
பிடித்த இந்தியரையே கைது செய்தது அமெரிக்கா
.
ராடார்களை ஏமாற்றிப் பறக்கும் நவீன தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்து அமெரிக்க ராணுவத்திற்குப் பேருதவி செய்த இந்திய பொறியாளரை அமெரிக்க உளவுத்துறை
கைது செய்துள்ளது.
நவீன தொழில் நுட்பத்ததை வெளிநாடுகளுக்கு விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நொஷிர் கவாடியா அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பொறியாளர் வயது 61. பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறினார். நவீன கருவிகளை வடிவமைப்பதில் இவருக்கு அபார திறமையுண்டு.
கருவி வடிவமைப்புத்துறையில் சர்வதேச புகழ்பெற்ற நார்த்தராப்க்ரமென் கார்ப்பரேசன் என்ற அமெரிக்க நிருவணத்தில் 18 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், 1986ல் அந்த நிருவணத்தில் இருந்து விளகினார். பிறகு பல்வேறு நிறுவணங்களுக்கம் வடிவமைப்பு ஆலோசகராக பணிபுறிந்து வந்தார்.
இவரது கண்டுபிடிப்புகளில் ராணுவக் கருவிகளும் உண்டு .
அமெரிக்க ராணுவத்தில் , ராடார்களின் கண்ணில் சிக்காத நவீண தொழில் நுட்பம் கொண்ட போர் விமானங்கள் உண்டு. இந்த தொழில் நுட்பத்தைக் கண்டு பிடித்ததிலும், இந்த தொழில் நுட்பம் கொண்ட 'பி-2 பாம்பர்ஸ்' என்ற குண்டு வீச்சு விமானங்களை வடிவமைத்ததிலும் நொஷிர் கவாடியாவின் பங்கு அதிகம்.
இந்த கண்டுபிடிப்புகள் நடந்த வேளையில், "நொஷிர் கவாடியாவின் குழு கண்டுபிடித்த தொழில் நுட்பம், அமெரிக்க விமானப்படையின் பலத்தைப் பலமடங்கு அதிகரித்துவிட்டது. எதிரி ராடார்களின் கண்ணில் மண்ணைத் தூவி விடும் தொழில் நுட்ப வசதி வந்துவிட்டதால்,
இனிமேல் நமது குண்டுவீச்சு விமானப்படை வீர்ரகளுக்கு உயிராபத்தும் குறைந்துவிடும். இந்த பேருதவியைச் செய்த நொஷிர் கவாடியா குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நொஷர் கவாடியா, அமெரிக்க காவின் ஹீரோ" என்று அமெரிக்க அரசும் ராணுவமும் அவரைப் போற்றிப் புகழ்ந்தன.
இப்பொது, இதே நொஷிர் கவாடியவை அமெரிக்க உளவுப் படையான எப்.பி.ஐ கைது செய்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க அரசின் துணை அட்டர்னி ஜெனரல் கென்ஸொரன்சன், வாஷிங்டனில் 07-11-05ல் அளித்த பேட்டி:
ராடார்களை ஏமாற்றும் நவீன தொழில் நுட்பத்ததையும், அமெரிக்க விமானப்படையில் இருக்கும் வேறு சில நவீன தொழில் நுட்பங்களையும் சில வெளிநாடுகளுக்கு நொஷர் விற்றுள்ளார். சில வெளிநாடுகளுக்கு சென்று இந்த நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது பற்றி அங்குள்ள சிலருக்கு பயிற்சியும் அளித்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
நொஷிரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் சி.டி.க்களில், அமெரிக்க விமானப் படையின் ரகசியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமார் 14 ஆயிரம் ரகசியக் கோப்புகளை அவர் நகல் எடுத்து வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த குற்றங்கள் தொடர்டபாக, ஹவாயின் மாய் நகரில் கடந்த புதன்கிழமை அன்று அவர் கைது செய்யப்பட்டார்.
இப்போது, ஹோனலூலு பகுதியில் உள்ள விசாரணைமையத்தில் காவலில் வைக்கப் பட்டுள்ளார். எப்.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் ராணுவ விசாரணைக் குழுவினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர். அவர் மீதான நீதிமன்ற விசாரணை விரைவில் தொடங்கும்.
ராணுவ ரகசியங்களைக் கடத்திவிற்பது ராஜதுரோகக் குற்றம். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் நொஷிருக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும் .
இவ்வாறு கெண் ஸோரன்டசன் தெரிவித்தார்.
இதுபற்றிபேட்டியளித்த நொஷிரின் மகன் ஆஷ்டன் கவாடியா, "என் தந்தையைத் தவறான தகவலின் பேரில் கைது செய்துள்ளனர். அவர் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்" என்று தெரிவித்தார்.
தகவல் தினமலர் 08-11-08

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு