அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

பிறந்த திதிப்படி குணங்கள்

தேய்பிறையில் பிறந்தவர்களை திதிப்படி பார்ப்போம்.
  1. பிதமை: இந்தத் தேய்பிறைக்காரர் மன்னிக்கும் மன்பான்மை கொஞ்சங்கூட இல்லாதவர்.
  2. துதியை: இந்தத் தேய்பிறைக்காரர் குடும்பத்தை விட்டு விலகி அவர்களோடு ஒட்டுறவின்றி வாழ விரும்பவார்.
  3. திருதியை: இந்தத் தேய்பிளைக்காரர் புதுமையான காரியங்களை செய்ய நினைப்பாவர். பழமையை வெறுப்பவர்.
  4. சதுர்த்தி: இந்தத் தேய்பிறைக்காரர் பணம் சம்பாதிப்பதையே இலட்சியமாகக் கொண்டவர்.
  5. பஞ்சமி: இந்தத் தேய்பிறைக்காரர் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக நினைப்பவர்
  6. சஷ்டி: இந்தத் தேய்பிறைக்காரர் புகழ் ஆசை மிகந்தவராய் இருப்பார்.
  7. சப்தமி: இந்தத் தேய்பிறைக்காரர் குழந்தைகள் மீது அதிக அன்புள்ளவர்.
  8. அஷ்டமி: இந்தத் தேய்பிறைக்காரர் தயாள குணம் கொண்டவர்
  9. நவமி: இந்தத் தேய்பிறைக்காரர் பொருள் படைத்தபணக்காரரின் நட்பை விரும்பவார், பணக்காரர்கள் இவரைத் தேடி வந்து நட்பு கொள்வர்.
  10. தசமி: இந்தத் தேய்பிறைக்காரர் பெண்பித்துப் பிடித்து அலைவர்.
  11. ஏகாதசி: இந்தத் தேய்பிறைக்காரர் மந்திரத் தந்திரங்களை கற்க ஆர்வ முடையவராய் இருப்பார்.
  12. துவாதசி: இந்தத் தேய்பிறைக்காரர் எண்ணியதை எண்ணியபடி முடிப்பார்.
  13. த்ரயோதசி: இந்தத் தேய்பிறைக்காரர் எந்த நிலையிலும் உண்மைக்கு மாறாக பொய் சொல்ல மாட்டார்.
  14. சதுர்த்தசி: இந்தத் தேய்பிறைக்காரர் எதையும் ஆழ்ந்து யோசிப்பார்.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு