அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

தீயவருக்கு செய்யும் உதவி தீங்கு

அன்றொரு நாள் ஒருவன் தனிவழிப்பதையில் நடந்து
சென்று கொண்டிருந்தான் அப்பொழுது ஆங்கொரு
பறையின் கீழொரு பாம்பு சிக்கிக்கொண்டிருக்க
அவனதைக் காக்க; பறையை நகற்றினால் பாம்பு
கடிக்குமா அன்றி நன்றிசொல்லி நகருமா யென யோசித்து
பின் அப்பாறைதனை நீக்கி பாம்பை காப்பற்ற
அப்பாம்பானது அவனை நேக்கி ,"இவ்வளவு நேரம் எனை காப்பாற்றாமல்
ஏன் சிந்தித்தாய் நானுன்னை கடிக்கப்போகிறேன் "என கூறி அவனை நெருங்க
அவனோட அது விரட்ட . அவ்வழிவந்த நரியொன்று ,"ஏனய்ய ஓடுகின்றனை
அவரவமே ஏனவரை துரத்துகின்றனை" என வினவ?
இருவரும் தங்கள் வழக்கை முறையிட தனக்கு விளங்கவில்லை
ஆரம்பமுதல் தெளிவாக செய்து காட்டுங்கள் என கேட்க
அவனோ மறுபடியும் பாம்பை அந்த பாறையின் இடுக்கில் வைத்து விட்டு
தான் முதலில் வந்த பாதைவழியே வந்து காட்டுகிறான் அங்கு நின்றான்;
நரிகேட்டது," நீ ஏன் காப்பற்றாமல் நின்றாய்."
அவன்," காப்பாற்றினல் பாம்பு என்னைக் கடிக்குமா அன்றி கடிக்காமல் போகுமாஎன யோசனை செய்தேன்" என்றான் .
நரி,"சரி இப்பொழுது என்ன தெரிந்து கொண்டாய் "
அவன்,"கடிக்கும் எனத் தெரிந்து கொண்டேன் "
நரி," அப்படி என்றால் நீ என்ன செய்ய வேண்டும் "
அவன்,"காப்பாற்றாமல் செல்ல வேண்டும்"
நரி," அப்படியே செய்"
அவன் சென்று விட்டான் பாம்பு ,"தந்திர நரியே " என கத்திச் செத்தது

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு