அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

திருச்சியில் வெள்ளம் காரணம் என்ன?

எவ்வளவு அளவு மேட்டூர் அணையிலிந்து தண்ணீர் வந்தாலும் அதை மேல் அணையிலிருந்து கெள்ளிடத்திற்கு திருப்பி விட அதன்கெள்ளலவு மற்றும் வேகமான போக்குக்கு வசதியாக இருக்கவேண்டும். தண்ணீர் பற்றாத காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க அங்கே கதவனைகள் கட்டி வைக்க வேண்டும். இரண்டு லட்சத்திற்கு மேலாக தண்ணீர் வந்தாலும் அதை வடியவைக்கக் கூய வசதி கொள்ளிடத்தில் இல்லாததலும் தான் திருச்சி நகருக்குள் தண்ணீர் பாய்ந்தது.
நஞ்சை நிலங்களில் வீட்டு மனைகளாகிவருவதால் அங்கு தண்ணீர் இருக்கத்தான் செய்யும் உதாரணமாக திருச்சி பாண்டமங்கலத்தில் பாத்திமா நகர் என்ற பகுதி நஞ்சை நிலமாக இருந்து அதை தற்போது வீட்டு மனைகளாக ஆக்கியபின் மனைகள் வாங்கியவர்கள் சிலர் வீடுகள் கட்டாமல் இருப்பதால் வயல் இருந்து ஆழத்திலேயே மனையிருப்பதால் மழைநீர் அதில் தேங்கி நிற்கிறது அந்த மனையைச் சுற்றி மாநகராட்சி சாலை அமைத்துள்ளதால் அந்த சாலை வயல் வரப்பு போலவும் மனை வயல் போலவும் இருப்பதால் தண்ணீர் தேங்கி தான் நிற்கும். இதற்கு வடிகால் வசதியிருக்கா என்றால் இல்லை; வயல்களாக இருக்கும் போது ஒவ்வொரு வயலாக வடிந்தும் உபரிநீர் வடிவதற்கென்றே ஒரு வாய்க்கால் இருக்கும் அதன் வழியா தண்ணீர் வடிந்து விடும் . தண்ணீர் வடியக்கூடிய பள்ளப்பகுதியில் மோடக ஆக்கி வீடு கட்டி விடுவதால் எங்கு வடியும். இதற்கு பின் காலத்தில் வராமல் இருக்கு சம்பந்த பட்ட நிபுணர்களை வைத்து அளவெடுத்து வடிகால் வசதியை செய்ய வேண்டும்.
ஒரு கட்சி அரசாட்சி செய்யும் போது சில திட்டங்களைப் போட்டு செயல்படும் போது வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் அதை தூக்கி கிடப்பில் போட்டு விடுகிறது. அப்படித்தான் இதுவும்
1999ல் திருச்சி பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி திருச்சியை வெள்ளம் பாதிக்கபட்ட பகுதியைக் காண வந்தார் அப்போது உறையூர், அரவானூர் மக்கள் பலமாக எடுத்துச்சொல்லவும் ; இனி வெள்ளம் பாதிக்காத வகையில் ரூ.50 கோடியில் வாய்க்கால்களை அகலப்படுத்த நிலம் கையப்படுத்த ஏற்பாடாகியது. அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போட்பட்டுள்ளது.
உள்ளுர் திட்டக்குழுமம் வீட்டு மனைகள் வரைபடம் அனுமதி வழங்கும்முன் தண்ணீர் வடிவதற்காண வழிமுறைகண்டபின்னே அனுமதி வழங்கினால் நன்றாக இருக்கும். அதாவது சாலைக்கு இடம் ஒதுக்கும் போதே மழைநீர் அல்லது வெள்ளம் வடிவதற்கும் ஒரு இடத்தை ஒதுக்கச் சொல்லி அனுமதி வழங்கலாம்.

3மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Me

1999 ம் ஆண்டு பெய்த பெருமழையின் காரணமாக பாத்திமா நகர் மற்றும் தியாகராஜ நகர் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்தான் என்னுடைய அக்காவிற்கு பெண்குழந்தை பிறந்திருந்தது. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அப்போதைய மாவட்ட கலெக்டர் மூர்த்தி பொறுப்பில்லாமல் வடிகால்நிலத்தில் உங்களையெல்லாம் யாரைய்யா வீடு கட்டச்சொன்னது என்று கேட்டார்? அந்த மனைகளுக்கு பட்டா அளித்த பொழுது, குடிநீர் இணைப்பு கொடுத்தப்போது, வரி வசூலித்தப்பொழுது எல்லாம் தெரியவில்லையா அவருக்கு அது வடிகால் நிலம் என்று.

மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அரசு அரசியலில் என்னசெய்ய அரசியல் வாதிகள் அரசு அலுவலர்களை அவ்வாறு செய்ய சொல்லும் போது என்ன செய்ய?

Post a Comment

<< முகப்பு