அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மரண தண்டனையை நீக்கக் கூடாது

கொலை குற்றம் செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனைஎன இருக்கம் போதே இவ்வளவு கொலை நடக்கிறது. அது இல்லை யென்றால் நி்த்தம் பல கொலை நடக்கும் ; தவறு செய்தவனுக்கு தண்டனை என இருக்கும்போதே இவ்வளவு நடக்கையில் . தூக்குத் தண்டனையில்லை யென்றால் சொல்லவும் வேண்டுமோ? அவனவன் துப்பாக்கியும், கத்தியையும், கொலைகருவிகளை எடுத்துக்கொண்டு கொண்று குவித்து விடுவார்கள் அல்லவா? இப்பொழுது இருக்கும் நடைமுறைசட்டத்தைதே கடைபிடிக்கலாம் என்பதே எனதுகருத்து.

தினமணி செய்தியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.சி. லஹொதி

மரண தண்டனையை நீக்கக் கூடாது
புதுதில்லி, நவ. 1: அரசமைப்புச் சட்டத்தில் இருந்து மரண தண்டனையை நீக்கக் கூடாது என்று திங்கள்கிழமை பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர். சி. லஹோதி கூறியுள்ளார்.
மரண தண்டனை குறித்து சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறிய கருத்து தொடர்பான விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தலைமை நீதிபதி லஹோதியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
தில்லியில் உள்ள தமது அலுவலகத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
அரசமைப்புச் சட்டத்தில் இருந்து மரண தண்டனை முறையை நீக்கக் கூடாது. கொடிய குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் முறை நாகரிக மனிதன் தோன்றிய காலம் முதலே இருந்து வருகிறது. மரண தண்டனையை நிறுவேற்றும் முறைதான் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.
பொது இடங்களில் குண்டு வைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் குடிக்கும் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனை கொடுக்க முடியும்.
மரண தண்டனை வழங்கும் முறை இந்தியக் குற்றவியல் சட்டத்தில் தொடர வேண்டும். மரண தண்டனையை மிக மிக அரிதாகவே வழங்க வேண்டும் என்று தமது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.
மரண தண்டனை விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் நிகழ்வுகளை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஒருவருக்கு மரண தண்டனை வழங்கும்போது அவர் தொடர்பான வழக்கின் அனைத்து அம்சங்களும் மிகவும் ஆழமாக ஆராயப்படுகிறது. அதன்பிறகே மரண தண்டனை வழங்கப்படுகிறது.
மரண தண்டனை விதிக்கப்படும்போது குற்றவாளியின் குடும்பத்தினர் பாதிக்கப்படுவர் என்பதே நம் கண் முன் நிற்கும்; அதையே பெரும்பாலானோர் வாதமாக வைப்பர். பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பத்தினரின் நிலை குறித்து நாம் சிந்திப்பதே இல்லை. பயங்கரவாதச் செயலால் ஒரு குடும்பத்தில் உயிரோடு எஞ்சியிருந்தது சிறு குழந்தை மட்டுமே என்பது எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
மரண தண்டனை குற்றவாளிகளுக்கு மீண்டும் வாழ்வு அளிக்க முடியுமா? என்று கேட்பவர்களை நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தமது கொடூரச் செயலால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான அப்பாவிகளுக்கு பயங்கரவாதிகளால் மீண்டும் உயிர் கொடுக்க முடியுமா? என்பதுதான் எனது வாதம்.
மரண தண்டனையில் இருந்து பணக்காரர்கள் தப்பி விடுகின்றனர்; ஏழைகள் மட்டுமே மாட்டிக் கொள்கின்றனர் எனக் கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
பயங்கரவாதத்தை ஒழிக்க அரசியல் உறுதி வேண்டும்: பயங்கரவாதத்தை ஒழிக்க அரசியல் உறுதி வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
இது தொடர்பாக அறிவியல்பூர்வமான ஆய்வு நடத்தப்பட வேண்டும். பிரச்சினைகள் புதிது புதிதாக எழும்போது அவற்றுக்கேற்ற முறையில் தீர்வு காண வேண்டும்.
பயங்கரவாத ஒழிப்பில் பஞ்சாபில் மேற்கொண்ட நடவடிக்கைகளை உதாரணமாக எடுத்துக் கொண்டு அதை நாடு முழுவதிலும் அமல்படுத்த வேண்டும்.
பொடா தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? பொடா சட்டம் நீதித்துறையினரால் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. அச்சட்டத்தை அமல்படுத்துவோர்தான் அதைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இந்த விஷயத்தில் அரசுகளைக் குற்றம் கூறவில்லை. அதை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களைத்தான் நான் கூறுகிறேன் என்றார் லஹோதி.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு