அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

இது வரை சென்னையில் 76 கோடி உதவித்தொகை

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி யில் தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 2 ஆயிரம் ரொக்கப் பணம், வேட்டி-சேலை, 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண் எண்ணை ஆகியவை வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக வடசென்னை பகுதியில் 3 லட்சத்து 27 ஆயிரம் குடும்பங் களுக்கு ரூ. 76 கோடி மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

2-ம் கட்டமாக இன்று மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் நிவாரண உதவிகள் வழங்குவதற்காக 100 ரேசன் கடைகள் மற்றும் 38 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 50 கவுண்டர் கள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இன்றும், நாளை யும் நிவாரண உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். இதை வாங்குவதற்காக இன்று காலையிலேயே ரேசன் கடை முன்பு நீண்ட வரிசையில் ஆண் களும், பெண்களும் காத்து நின்றனர். சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படுகிறது.
செய்தி மாலை மலர்
இவ்வளவு குடும்பங்கள் சென்னையில் மழையில் பாதிக்கப்பட்னவா? அல்லது சென்னை குடிசை வாசிகள் அனைவருக்கும் வழங்கப்படுகிறதா தேர்தலை? ஒட்டி.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு