அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மன்னர் கோட்டை மாட்டுத் தொழுவம்

சுதந்திரப் போராட்டக் காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து வீரமுழக்கமிட்ட மருது சகோதரர்களின் கோட்டை தற்போது அரசின் பாராமுகத்தால் மாட்டுத் தொழுவமாக காட்சியளிக்கிறது.
1731ம் ஆண்டு ராமநாதபுரம் சீமை தஞ்சை மராட்டிய மன்னர்களால் சிவகங்கை, ராமநாதபுரம் என இரும பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மறவர் இன சிற்றரசர்கள் வசம் ஒப்படைக்கபட்டது. சிவகங்கை பகுதியை ஆண்ட சசிவர்ண தேவர் வம்சத்தவரால் அரண்சிறுவயல் என்ற ஊரில் அரண்மையும், பாண்டியர்மதிற்சுவரும் கட்டப்பட்டது.
18ம் நூற்றாண்டில் மருது சகோதரர்கள் இந்த அரண்சிறுவயல் அரண்மனையில் தங்கி ஆட்சி புரிந்ததோடு வெள்ளையர்களை தீரமுடன் எதிர்த்தனர். வெள்ளையர்க்களை எதிர்க்க படை பயிற்சி அளித்தனர். கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததால் மருது சகோதரர்களை வெள்ளையர்கள் தந்திரமாக கைது செய்து புளியமரத்தில் தூக்கிலிட்டனர்.
மதுருபாண்டியர்கள் ஆண்டதால் அரண்சிறுவயல் அரண்மனை மருதுபாண்டியர் கோட்டை என அழைக்கப்பட்ட தோடு இந்த ஊருக்கு அரண்மனை சிறுவயல் என்ற பெயரும் ஏற்பட்டது.
அரண்சிறுவயலில்உள்ள மருது பாண்டியர் கோட்டை பின்னர் மருது சகோதரர்களின் நினைவுச் சின்னமாக்கப்பட்டது. மருதுபாண்டியர் கோட்டை மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறைமற்றும் மாநில அரசுகளின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது இந்த மருதுபாண்டியர் நினைவிடத்தின் கதவுகளின் புட்டை உடைத்து சிலர் நினைவிடத்தை மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர். கோட்டையின் உட்புறத்தில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் அடைக்கப்பட்டுள்ளன மேலும் சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த நினைவுச் சின்னம் சிதலமைந்து வருகிறது. வெள்ளையர்களை தீரமுடன் எதிர்த்துப் போரிட்ட மருது சகோதரர்களின் நினைவிடத்துக்கே இந்த கதியா!! எனக் கண்ணீர் வடிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இது இன்றைய தினமலரில் வெளியாகியது
நாட்டுக்குப்போராடிய மன்னர்களின் நினைவிடத்தை கவணிக்காத அரசையும் அங்குள்ள மக்களையும் என்னவென்று சொல்வது இந்த மாதம் 24ந் தேதி தான் அம்மன்னர்களின் நினைவு நாளாகும். நாட்டுக்கு உழைத்த அம்மன்னர்களின் வரலாற்றைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள்.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு