அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

சொல்லின் செல்வர் சம்பத் விலகல்

தி.மு.கழகத்தை விட்டு சம்பத் விலகல் தனிக்கட்சி தொடங்கினார்

தி.மு.கழகம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்த நிலையில், 1961_ல் ஒரு சோதனை ஏற்பட்டது.

1961 ஜனவரி 21, 22 தேதிகளில் தி.மு.க.வின் பொதுக் குழு கூட்டம் வேலூரில் நடந்தது. இதில், தி.மு.க. தலைமை மீது ஈ.வெ.கி.சம்பத் குற்றச்சாட்டுகளைக் கூறினார். தி.மு.கழகம் சட்டதிட்டங்களில் திருத்தம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தினார். அவரது கருத்துகளுக்கு ஆதரவு இல்லாததால், அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

உண்ணாவிரதம்

தி.மு.கழகத்தில் வன்முறை அதிகரித்து விட்ட தாகக்கூறி, சென்னையில் உண்ணாவிரதம் தொடங்கினார்.

பெரியாரின் அண்ணன் மகனான சம்பத், பெரியாரின் திருமணத்தை எதிர்த்து திராவிடக் கழகத்திலிருந்து வெளியேறியவர். தி.மு.கழகம் உருவானது முதல், அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். சிறந்த பேச்சாளர். "சொல்லின் செல்வர்" என்று புகழ் பெற்றவர்.

எனவே, அவரை இழக்க விரும்பாத அண்ணா, உண்ணா விரதம் தொடங்கிய 23_வது நாளில் சம்பத்தை நேரில் சந்தித்து, சமா தானப்படுத்தினார். உண்ணா விரத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு, பழரசம் கொடுத் தார். பழரசம் அருந்தி சம்பத் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

புதுக்கட்சி

தி.மு.கழகத்தில் தோன்றிய புயல் அத்துடன் ஓய்ந்துவிட்டதாக அனைவரும் கருதினர். ஆனால் யாரும் எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன.  

சம்பத், திடீரென்று டெல்லிக்குச்சென்றார். அங்கிருந்து திரும்பியதும், தி.மு.கழகத்தை விட்டு விலகி, "தமிழ்த் தேசிய கட்சி" என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

கண்ணதாசனும் தி.மு.கழகத்தை விட்டு விலகி, சம்பத் கட்சியில் இணைந்தார்.

சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது

முதல் தி.மு.க. மேயர் அ.பொ.அரசு 1959_ல் சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க. போட்டியிட்டது. மொத்தம் உள்ள 100 இடங்களில், 90 இடங்களுக்கு போட்டியிட்ட தி.மு.கழகம் 45 இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் போட்டியிட்டு 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் பெற்ற மொத்த ஓட்டுகள் 1,43,783. தி.மு.கழகம் பெற்ற ஓட்டுகள் 1,48,712.

அ.பொ.அரசு

சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் தேர்தல் 24_4_1959_ல் நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் அ.பொ. அரசு போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜி.ராஜமன்னார் நிறுத்தப்பட்டார்.

வாக்கெடுப்பில் அ.பொ.அரசுக்கு 60 ஓட்டுகளும், ராஜமன்னாருக்கு 45 ஓட்டுகளும் கிடைத்தன.

சென்னை மாநகராட்சியின் முதல் தி.மு.க. மேயராக அ.பொ.அரசு பதவி ஏற்றார்.

2மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger ஜோ / Joe

என்னார் ஐயா,
உங்கள் பதிவுக்கு என்ன அர்த்தம்-னே புரியல்ல.மாலை மலர் இணைய பக்கத்துல இருந்து எடுத்து எதற்கு பதிவா போடணும்?

சுட்டி கொடுத்துட்டு போகலாமே?

இதோ சுட்டி
http://www.maalaimalar.com/htmls/valralatusuvadugal/tamilnadu/tamilnadu31.htm

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

மலரும் நிலைவுகள்
அனைவரும் தெரிந்து கொள்வேண்டும் தேர்தல் வரவிருக்கிறதல்லவா? இனி அந்த தொடுப்பையும் கொடுப்போம்.
நன்றிஜோ

 

Post a Comment

<< முகப்பு