அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

ரூபாய்க்கு ஒரு படி அரிசி

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரூபாய்க்கு ஒருபடி அரிசி போடுவோம்" என்று தி.மு.கழகம் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.ஆட்சிக்கு வந்ததும், அதை அமுல் நடத்த அண்ணா நடவடிக்கை மேற்கொண்டார். "இதற்கு அதிக செலவாகும்" என்று அதிகாரிகள் கூறினார்கள். எனினும், முதல் கட்டமாக சென்னையிலும், கோவையிலும் "படி அரிசி திட்டம்" அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது.இதுபற்றி அண்ணா ஒரு கூட்டத்தில் கூறியதாவது:"இப்போது படி அரிசி திட்டத்தை அமுல் நடத்துவதால் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை செலவாகிறது. எல்லா மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தினால், ஆண்டுக்கு ரூ.10 கோடி செலவாகும்.இந்தத் திட்டத்தை நிறை வேற்ற உதவி செய்யும்படி, மத்திய அரசை கேட்டோம். "புது வரி போட்டுக் கொள்ளுங்கள்" என்று மத்திய அரசு கூறிவிட்டது."இதற்காக புது வரி போடமாட்டேன்" என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டேன். தமிழ் மக்கள் இப்போது இருக்கும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு புது வரி பற்றி யோசிப்பது இயலாத காரியம் என்றும் தெரிவித்து விட்டோம். ராணுவத்திற்கு மத்திய அரசு ஏராளமாக செலவு செய்கிறது.  இதில் ரூ.100 கோடியை மிச்சப் படுத்தி மாநிலங்களுக்கு கொடுத்து உதவலாம். இப்படி செய்தால், அந்தந்த மாநிலங்கள் போடும் புதிய திட்டங்களை நிறைவேற்ற முடியும்."இவ்வாறு அண்ணா கூறினார்.இராணுவத்திற்கு செலவை குறைத்தால் நாடு நாடாயிருந்திருக்காது      

4மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger குழலி / Kuzhali

2020ல் நாம் வல்லரசு

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வரவேற்போம் நம்மில் ஐந்தாம்படை ஒழிந்தாலே நாம் வல்லரசுதான்
காட்டிக்கொடுக்கும் கூட்டம் இருக்கே!!

என்னார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger தெருத்தொண்டன்

ராணுவத்திற்கான செலவைக் குறைக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு "ஐந்தாம் படை" என்று புதுப் பெயர் சூட்டி மகிழ்கிறீர்கள் போல இருக்கிறது!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அல்ல நாட்டின் நலனில் அக்கறையில்லாமல் காட்டிக் கொடுக்கிறார்களே அவர்கள். எதிரி நாட்டுக்கு உள்நாட்டில் இருந்து கொண்டே ரகசியத்தை சொல்லக்கூடியவன். இந்திய சட்டத்தை மதிக்காமல் பணத்துக்காக தாய் திருநாட்டையே காட்டிக்கொடுக்கும் துரோகிகள்.

என்னார்

 

Post a Comment

<< முகப்பு