அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

ஒகேனக்கல் பகுதியில்,

சென்னை, செப்.29: ஒகேனக்கல் பகுதியில், அருவி அருகில் கைப்பிடி கம்பிகள் அமைக்கப்படும் இடம் தமிழகத்துக்குதான் சொந்தம் என்பது மத்தியக் குழு மேற்பார்வையில் நடக்க உள்ள கூட்டு நில அளவையின்போது நிரூபிக்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

நடப்பு நிதியாண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை மீது ஹேமச்சந்திரன் (மார்க்சிஸ்ட்) புதன்கிழமை பேசியபோது, பக்கத்து மாநிலங்களுடன் தமிழக அரசு சுமுக உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:

பக்கத்து மாநிலங்களுடன் எப்போதும் தமிழகம் பிரச்சினை செய்வதில்லை. காவிரிப் பிரச்சினையைப் பொருத்தவரை தமிழகத்தின் மீது எந்தத் தவறும் கிடையாது. ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. எனவே, நீதிமன்றத்துக்குப் போகிறோம்.

அதேபோல கிருஷ்ணா நீர் திட்டத்தில் சென்னைக்கு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரம் தர வேண்டும் என எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஆனால், அதன்படி தண்ணீர் தருவதில்லை. அதை திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறோம். யாருடனும் தமிழகம் சண்டை செய்வதில்லை.

ஒகேனக்கல் பிரச்சினை ஏன் ஏற்பட்டது என்றே தெரியவில்லை.

மத்திய அரசு வெளியிட்ட வரைபடத்தைதான் அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றன. தற்போது கைப்பிடி அமைக்கும் பகுதி தமிழகத்திற்குச் சொந்தமானது என்று அந்த வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. எத்தனையோ ஆண்டுகளாக அது தமிழகத்தின் பயன்பாட்டில்தான் இருந்து வருகிறது. திடீரென கர்நாடகம் அதுபற்றி பிரச்சினை எழுப்புகிறது. அது தமிழகத்திற்குச் சொந்தமான பகுதி என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன் என்றார் முதல்வர்.
தினமணி செய்தி
இது சம்பந்தமாக எந்த இயக்கமும் வாய்திறக்கக் காணோம் தேவையில்லாமல் கர்னாடக மக்கள் வருகிறார்களா? அல்லது நாம் அவர்கள் இடத்தில் பாது காப்பு கம்பி வைக்கிறோமா? தனிநபர் குஷ்பு விவகாரத்திற்கு இருந்த வேகம் இதற்கு இல்லை அதற்காக குஷ்புவை கண்டிக்க வேண்டாம் என நான் சொல்ல வில்லை இதையும் கண்டிக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

2மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger NambikkaiRAMA

முதல்வர் பேச்சினை கேட்கும்போது நம்து பக்கமே நியாயம் இருப்பதாய் தெரிகிறது. மத்திய அரசு உடனே முடிவு எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் அப்பாவித் தமிழர்கள் இப்பிரச்சனையால் பாதித்து விடக்கூடாது.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஆம் உண்மைதான்

என்னார்

 

Post a Comment

<< முகப்பு