`எய்ட்ஸ்' நோயாளி குணமடைந்து விடுவான்.
மாத்தூர் அருகே 400 ஆண்டு பழமையான சகல வினை தீர்க்கும் சஞ்சீவிராயர் கோவில்கல்லிலே கலைவண்ணம் கண்டவர்கள் நமது முன்னோர்கள். கடவுள் மேல் உள்ள பக்தியாலும் ஆன்மீகத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தாலும் அரசர்கள் நமதுநாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கோவில்களை கட்டினர்.
வரலாற்று சுவடுகளில் நாம் பின்னோக்கி செல்லும் போதுதான் அந்த கோவிலின் பின்னணியும் நமக்கு தெரிய வருகிறது. சில கோவில்கள் இன்று சுவடுகள் கூட இல்லாமல் அழிந்த நிலையில் இருந்து வருகின்றன. ஆனால் சில கோவில்கள் ஆன்மீகவாதிகளால்புதுப்பிக்கப்பட்டு கால சுழற்சிக்கு ஈடுகொடுத்து தனது ஆயுட்காலத்தை நீடித்து கொள்கிறது.
சில கோவில்கள் பெருமைகளும் அரிய பல ஆதாரங்களையும் பெற்றிருப்பினும் மக்களிடையே அந்த கோவிலின் தொன்மை சென்றடைவது இல்லை. அப்படி ஒரு கோவிலின் வரலாற்றை இப்போது நாம் காணலாம்.
திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் ஆவூர் செல்லும் சாலை மாத்தூர் பகுதியில் பிரிகிறது. இந்த கிளை சாலை வழியே 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சஞ்சீவிராயர் கோவில். மாத்தூர் ஊராட்சி ராசிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 400 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில் அனுமார் மூலவராக வீற்றிருக்கிறார். இந்த கோவிலின் வரலாற்றை பார்ப்பதற்கு முன் சஞ்சீவி ராயர் என ஏன் அனுமனை அழைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
சீதையை மீட்க இலங்கை சென்ற ராமனும், லட்சுமணனும் ராவணனோடு போரிடுகிறார்கள். அப்போது நாக பாசனம் கலந்த அம்பை ராவணன் லட்சுமணன் மீது எய்து விடுகிறான். இதில் பாதிக்கப்பட்ட லட்சுமணன் நோய்வாய்ப்படுகிறான். அந்த நாகபாசனத்தில் இருந்து லட்சுமணனை மீட்க ஒரு மூலிகை செடியின் இலையால்தான் முடியும் என சித்தர்கள் கூற அந்த மூலிகை செடி எங்கே இருக்கிறது என ராமன் கேட்கிறார்.
அதற்கு சித்தர்கள் அந்த மூலிகை செடி இமயமலை பகுதியில் உள்ள சஞ்சீவி மலையில்தான் உள்ளது என கூறினர். உடனே ராமன் அருகில் இருந்த அனுமார் நான் அந்த செடியை எடுத்து வருகிறேன் எனக்கூறி புறப்படுகிறார். அவ்வாறே அவர் சஞ்சீவி மலை செல்கிறார். ஆனால் அங்கு அவர் பறித்து வர வேண்டிய மூலிகை செடி எது என்று அவருக்கு தொìயவில்லை. லட்சக்கணக்கான மூலிகை செடிகள் கொண்ட அந்த மலையில் தனக்கு தேவையான செடியை எப்படி தேடுவது? என யோசிக்கிறார்.
உடனே அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. மலையையே எடுத்துச் சென்று விட்டால் அங்கு சித்தர்கள் தங்களுக்கு தேவையான செடியைபறித்து கொள்வார்கள் என நினைக்கிறார். அதன்படி அவர் மலையை ஒரு கையில் ஏந்தியபடி எடுத்து கொண்டு வருகிறார். அங்கு சித்தர்கள் மூலிகை செடியை பறித்து லட்சுமணனுக்கு கொடுத்து அவரது உயிரையும் காப்பாற்றி விடுகிறார்கள். சஞ்சீவி மலையை தூக்கி சென்றதால் அனுமார் சஞ்சீவிராயர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த கதைக்கும் மாத்தூர் அருகே உள்ள சங்சீவிராயர் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் என்பதை இனி பார்ப்போம்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விராலிமலை ஒனறிய பகுதி அந்த காலத்தில் கிஷ்கிந்தாபுரம் என அழைக்கப்பட்டு வந்தது. இந்த கிஷ்கிந்தாபுரம் வனங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. ராமபிரான் உத்தரவுப்படி அனுமார் சஞ்சீவி மலையை எடுத்துக் கொண்டு செல்லும் போது அவருக்கு அசதி ஏற்பட்டது. தனது அசதியை போக்க அவர் கிஷ்கிந்தா புரத்தில் மலையை சிறிது நேரம் இறக்கி வைத்து விட்டு தங்கினார். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சென்றதாக புராணம் கூறுகிறது. அப்படி அனுமார் ஓய்வெடுத்த இடம்தான் தற்போது உள்ள சஞ்சீவிராயர் கோவில் பகுதியாகும். அப்போது அங்கு கோவில் எதுவும் எழுப்பப்படவில்லை.
பின்னர் நீண்ட நாட்கள் கழித்துதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
ராசிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் தினமும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு தற்போது இருக்கும் சஞ்சீவிராயர் கோவில் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். ஒரு ஆடு மட்டும் அடிக்கடி ஒரு அடர்ந்த புதருக்குள் சென்று விட்டு நீண்ட நேரம் கழித்து வந்தது. 2, 3 நாட்கள் இதனை கண்காணித்த சிறுவர்கள் ஆடு எங்கே செல்கிறது என்பதை பார்க்க ஒருமுறை ஆட்டை பின் தொடர்ந்தனர். அப்போதுதான்அந்த அரிய காட்சியை அவர்கள் பார்த்தனர்.
அங்கு புதரின் மறைவில் ஒரு அனுமார் சிலை இருந்தது. சிலையின் வாய் பகுதியில் ஆடு தனது மடியில் இருந்துபாலை சுரந்து கொண்டிருந்தது. அந்த பாலும் கீழே சிதறவில்லை. இதனை பார்த்த சிறுவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அப்போது சிறுவர்களில் ஒருவருக்கு அனுமார் காட்சி தந்து தனக்கு இங்கு கோவில் அமைத்து வழிபடுமாறு கூறினார். இதனை அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறினான். அதன் பிறகு அங்கே சிறிய அளவில் கோவில் கட்டப்பட்டு வழிபட தொடங்கினர். அந்த சிறுவனின் பரம்பரையினரே இன்றும் அறங்காவலர்களாக உள்ளனர்.
ஆனாலும் இந்த கோவிலின் பெருமை பக்கத்து ஊருக்கு கூட தெரியாமல் இருந்து வந்தது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தை 1726-ல் ராஜவிஜய ரகுநாதராயபாதர் தொண்டைமான் என்பவர் ஆட்சி செய்தார். அவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு முறை அவர் சஞ்சீவி ராயர் கோவில் இருக்கும் பகுதிக்கு வந்தார். அவர் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
கோவில் அர்ச்சகர் ஒரு பச்சிலையை அனுமாருக்கு பூஜை செய்து விட்டு அரசனிடம் கொடுத்தார். இந்த பச்சிலை மூலிகை செடியில் இருந்து பறிக்கப்பட்டது. இதனை அரைத்து நீங்களும் உங்கள் துணைவியாரும் சாப்பிடுங்கள். சில நாளில் உங்கள் மனைவி கருவுற்று குழந்தை பெறுவார் என கூறினார்.
முதலில் இதனை நம்ப மறுத்த அரசர் எதற்கும் சாப்பிட்டு பார்ப்போமே என நினைத்து வாங்கி சென்றார். அந்த பச்சிலையை சாப்பிட்ட 13 நாளில்அரசனின் துணைவியார் கருவுற்றார். மன்னருக்கு வாரிசும் பிறந்தது. இதனால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்த அவர் இந்த கோவிலுக்கு 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.
கோவிலையும் பெரியதாக்கி கட்டி கொடுத்தார். அதன்பிறகே இந்த கோவிலின் பெருமையை உலகம் அறிய தொடங்கியது.
பின்னர் பலர் செய்த நிதி உதவியால் கோவில் மண்டப பகுதி 1969-ல் முழுமை பெற்றது. ஆனாலும் பல தடைகளால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. அந்த தடைகளையும் கடந்து கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தேறியது.
தற்போது இந்த கோவிலை நாராயணசாமி தாசர் மகன் சீனிவாசன், சஞ்சீவிநாயுடுவின் மகன்கள் கோவிந்த ராஜன், ரெங்கராஜன், சுந்தர்ராஜன், வரதராஜன் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். சீனிவாசன் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
ஆண்டுதோறும் சித்திரை அல்லது வைகாசியில் வரும் மூல நட்சத்திரத்தில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளிலும், மார்கழி மாதம் அனுமார் ஜெயந்தியும் மற்ற முக்கிய நாட்களில் வழக்கமான அராதனைகளும் இங்கு நடைபெறுகிறது.
இந்த கோவிலின் சிறப்பு என்ன? அரிய பொக்கிஷமாக இந்த கோவில் இருந்தும் இன்னும் பலர் அறியப்படாத அளவில் இருப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்து கோவில் அர்ச்சகர் சீனி வாசன் கூறியதாவது:-
உலகில் உள்ள அனுமார் கோவில்களில் தேர் உள்ள அனுமார்கோவில்களைவிரல் விட்டு எணணிவிடலாம். அவற்றில் இந்த கோவிலும் ஒன்று. மேலும் வேறு எந்த அனுமார் கோவிலுக்கும் இல் லாத ஒரு சிறப்பு இங்கு அரிய வகை மூலிகை செடிகள் இருப்பதுதான் சஞ்சீவிமலை இங்கு இறக்கி வைக்கப்பட்ட தால்தான் இந்தமூலிகை செடி கள் இங்கு வளர்ந்து வருகிறது. இந்த மூலிகை செடிகள் மூலம் பல பக்தர்களின் நோய் களுக்கு நாங்கள் மருந்து கொடுக்கிறோம். இது வியா பார நோக்கில் அல்ல. அனுமனை வேண்டி வரும் பக்தர்களுக்கு அணுவளவும் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பிரச்சினை கள் வரக்கூடாது என்ற நோக் கத்தில்தான் சில மூலிகை மருந்துகளை நாங்களே தயார் செய்து தருகிறோம். சில நோய் களுக்கு மூலிகை செடிகளை தருகிறோம். அவர்கள் எடுத்து சென்று அரைத்து பொடி செய்து சாப்பிடுகிறார்கள்.
குழந்தை பாக்கியம் பெற மூலிகை மருந்து தருகிறோம். பலர் இந்த மருந்தினை வாங்கி சென்று சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற்றி ருக்கிறார்கள். அதைபோல் மூட்டு வலி வந்தவர்கள் இங்கு வந்தால் அவர்கள் காலில் மூலிகை செடி பறித்து சாறை தடவி சென்றால் மூட்டு வலி சரி செய்து நலமாகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் தற்போது `எய்ட்ஸ்' என்று சொல்லப்படும் பால் வினை நோய் தீரவும் இங்கு உள்ள மூலிகை செடிகளின் சாறை பயன்படுத்தி அவர் களை குணமாக்க மடியும். அதற்கு 120 மூலிகை செடி களின் சாற்றினை ஒன்றாக கலந்து சாப்பிட வேண்டும்.
அவ்வாறு சாப்பிட்டு வந்தால் `எயட்ஸ்' நோயாளி குணமடைந்து விடுவான். மேலும் ஆண்மை குறைபாடு உள்ள ஆண்களுக்கு இங் குள்ள ஒரு மூலிகை செடியின் சாற்றை கொடுத்தால் அவர் களுக்கு அதற்கு பிறகு அந்த பிரச்சினை இருக்காது. மாத விடாய் கோளாறில் பாதிக்கப் படும் பெண்களுக்கும் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கு மூலிகை இலைகள் இருக்கிறது. இங் கிருந்து பலர் மூலிகை செடி களை பறித்து சென்று மூலிகை மருந்தாக தயாரித்து வற்பனை செய்கிறார்கள். இந்த மூலிகை செடிகளை பறித்து செல்ல கோவிலுக்கு என ஒரு தொகை செலுத்தி விடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
நன்றி மாலை மலர்
2மறுமொழிகள்:
//இன்னும் சொல்லப் போனால் தற்போது `எய்ட்ஸ்' என்று சொல்லப்படும் பால் வினை நோய் தீரவும் இங்கு உள்ள மூலிகை செடிகளின் சாறை பயன்படுத்தி அவர் களை குணமாக்க மடியும். அதற்கு 120 மூலிகை செடி களின் சாற்றினை ஒன்றாக கலந்து சாப்பிட வேண்டும்.
அவ்வாறு சாப்பிட்டு வந்தால் `எயட்ஸ்' நோயாளி குணமடைந்து விடுவான்
//
இன்றைய நிலையில் பில்கேட்சை விட பெரிய பணக்காரராக ஒரே வழி எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது, நீங்கள் மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையா? ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? இல்லை செவிவழிச்செய்தியா? இது உண்மையெனில் நம் சித்த மருத்துவத்துறைக்கு தகவல்கள் அனுப்பினால் அவர்கள் ஆராய்ச்சியை மேற்கொள்வார்களே!
நன்றி
எனது நண்பருக்கு அவருக்கு உடலில் சர்க்கரை வியாதி (அது சம்பந்தப்பட்டது) அங்கு போனபிறகு சரியாகிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.மற்றபடி எனக்குத் தெரியாது வேண்டுமானால் கேட்டுச்சொல்கிறேன் எனது வீட்டிலிருந்து 20 கிமீக்குள் தான் இருக்கும்.
நான் அந்த வழியில் சில ஆண்டுகளுக்கு முன் சைக்கிளில் சென்று அங்கு உட்கார்ந்து ஓய்வெடுத்துச் சென்றேன் அப்பொழு அது ஒரு குக்கிராமம்.
என்னார்
Post a Comment
<< முகப்பு