அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

புதன், செப்டம்பர் 21, 2005

ராமதாஸின் போராட்டம்

இன்று இரவு சன் செய்தியில் உயிரக்கொடுத்தாவது தமிழைக் காப்பாராம் மருத்தவர் ராமதாஸ்
முதலில் தமது மகனை வேட்டி கட்டச்சொல்லுங்கள் முழுகால் ட்ரவுசரை கழற்றச்சொல்லுங்கள் ஏன் தமிழை யாராவது திருடிச்செல்லுகிறார்களா?
தமிழுக்கு எங்கு ஆபத்து வந்தது.

17மறுமொழிகள்:

21 செப்டம்பர், 2005 20:59 மணிக்கு, எழுதியவர்: Blogger -/பெயரிலி.

குழந்தை, தமிழுக்கும் டவுசருக்கும் என்ன அசம்பந்தம்?

 
21 செப்டம்பர், 2005 21:02 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

தமிழன் என்பவர் தமிழர் உடைதான் உடுத்தவேண்டும் அதை விடுத்து ஊருக்குத்தான் உபதேசம் என வேடமிடுவதுதான் வேடிக்கை
என்னார்

 
21 செப்டம்பர், 2005 21:14 மணிக்கு, எழுதியவர்: Blogger பரஞ்சோதி

என்னார் அவர்களே!

ராமதாஸர் முதலில் தன் பெயரை தமிழில் மாற்றட்டும், பெயருக்கு முன்னாள் மருத்துவர் என்று போடச் சொல்லட்டும். தன் பேரக் குழந்தைகளோடு தமிழிலில் பேசட்டும்.

ஏதோ தமிழ் திருட்டு போனது போல் முக்கா திருடன், அரைக்கால் படி திருடன் எல்லாம் போராட்டம் நடத்துறாங்க. மைக் கிடைச்சா நல்லா தான் பேசுறாங்க. ஏதோ நகைச்சுவை மாதிரி எடுத்து கொள்ளுங்க.

 
21 செப்டம்பர், 2005 21:17 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சரி அப்படியே நன்றி பரம்ஸ்

என்னார்

 
21 செப்டம்பர், 2005 21:43 மணிக்கு, எழுதியவர்: Blogger -/பெயரிலி.

பேஷ் பேஷ் நன்னாருக்கே ஒங்களோட ஜோக்கு.

செமை தமாஷான அம்பிங்கடா நீங்கள். அண்ணா யூர்னிவஸிட்டில டீஸெண்டா உடை இருக்கணுமுன்னு ஸொன்னா, லிபர்டி மஜஸ்டிக்குன்னு இங்கிலீஸு ஸிமா த்யேட்டர் பேர் மாதிரி தாம்தூம்னு கத்துவேள். ஆனா, இங்க மட்டும் டோட்டி தமிழ்கல்சர் ஆகிடுதாக்கும்.

ஒங்கள மாதிரி அம்பிகளாலதானே தமிழுக்கே ஆபத்து.

டோட்டி தமிழனோட ட்ரடிஸனல் காஸ்டுயூமா? அப்புறம் கௌபீனம் என்னாகிறது? மாரை ஜாக்கெட்டு மறைக்காம ஊர்ல ஒலாவிடலாமா? ஒங்களுக்கெல்லாம் ராமதாஸ் திருமா தங்கர்பச்சான் ஏதாச்சும் சொன்னா, ஆகாதே. ராமதாஸு, அன்புமணி டயரியாவுக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதுனாக்கூட, கன்ஸ்டிபேட் பண்ணத்தான் மாத்திரை ஸாப்டுவேன்னு அடம்பிடிப்பேள்.

என்னத்த ஸொல்ல! குலக்கல்வி, பண்டிட்டு, பனியால்லாம் போயி ஆசாரம் கெட்ட அநாசாரப்பயலுகளெல்லாம் அரசியலுக்கு வந்துட்டானில்லையோ! கலி முத்திடுத்து!!

 
21 செப்டம்பர், 2005 22:00 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அய்யா அய்யய்யா என்ய்யா சொன்னீங்ய்யா நேக்கு ஒன்றும் விளங்களே அடுத்தாவள பேசுரப்போ நாம சுத்தமா இருக்கோமான் பாத்துட்டுபேசனுங்கறேன் தாங்கள் என்ன சொல்ரீங்க?

என்னார்

 
21 செப்டம்பர், 2005 22:02 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

//தமிழ்க்காப்பையும் வேட்டியையும் சம்பந்தப்படுத்துவோருக்காக இன்னொரு போராட்டம் நடத்தப்பட வேண்டும்.//

ஏன் போராட்டம் என்றால் உங்களுக்கு இணிப்பா? நடத்துங்கோ அசோகர் சாலைகளில் மரம் வைத்தார் நீங்க வெட்டி சலையை மூடுங்கோ

என்னார்

 
21 செப்டம்பர், 2005 22:06 மணிக்கு, எழுதியவர்: Blogger -/பெயரிலி.

என்னா அம்பீ,
போராட்டமுன்னா, சாலை மரங்களை வெட்டி சாலையை மூடுறது மட்டுமாங்கிறேள்? மராட்டி பாப்பா மோரி கணபதியை சாலை எல்லாம் இழுத்து மூட ஊர்வலம் நடத்தி கடலிலே கரைச்சு பொலூட் பண்றதும் வருமில்லையோனா?

 
21 செப்டம்பர், 2005 22:22 மணிக்கு, எழுதியவர்: Blogger -/பெயரிலி.

இணிப்பா? - இனிப்பா?

முழுகால் ட்ரவுசர் - முழுக்கால் 'ட்ரவுசர்'

தமது மகனை - அவரது மகனை
(மருத்துவரை அவரது மகனை)

மருத்தவர் - மருத்துவர்

இன்று இரவு சன் செய்தியில் உயிரக்கொடுத்தாவது தமிழைக் காப்பாராம் மருத்தவர் ராமதாஸ்
- இன்று இரவு சன் செய்தியிலே சொல்லப்பட்டதாவது,"உயிரைக் கொடுத்தாவது தமிழைக் காப்பாராம் மருத்துவர் ராமதாஸ்."
(அவன் 'இன்று இரவு சன் செய்தியில் உயிரைக் கொடுப்பதாக'ச் சொல்லவில்லை)

தமிழுக்கு எங்கு ஆபத்து வந்தது.
- தமிழுக்கு எங்கு ஆபத்து வந்தது?


சலையை - சாலையை (இதைத் தட்டச்சுத்தவறு என்று எடுத்து விட்டுவிடுவோம்)

=========
இத்தனை தமிழிலக்கணத்தவறுகளுடன் எழுதிவிட்டு, தமிழை திருடிச் செல்கிறவர் பற்றிய கிண்டல் வேறு செய்ய உமக்குத் தோன்றுகிறதா?

 
21 செப்டம்பர், 2005 22:45 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நீங்க உங்க கடையில் ஆங்கிலத்தில் பெயர்பலகை வைத்து அதில் தார் பா.மா.க அடிக்கலையா?

அதான் இம்பூட்டு போசுரீங்களா

என்னார்

 
21 செப்டம்பர், 2005 22:46 மணிக்கு, எழுதியவர்: Blogger ஜோ/Joe

இந்த என்னார்-க்கு வேற வேலையே கிடையாது போல.ராமதாஸ்-ஐ எதிர்க்கிறேன் பேர்வழின்னு எதையாவது உளறி வாங்கிக்கட்டிக்குறதே வழக்கமாப்போச்சு .

 
21 செப்டம்பர், 2005 22:53 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

எப்படித்தான் நாம் பேசுவது எதைப் பேசுவது தவறை தவறு என சுட்டிக்காட் வேண்டாமா? தமிழ் மொழியை யாராவது திருடிக்கிட்டு போகப்போராங்களா? இவர் என்னத்தை காப்பத்தப் போகிறார் சற்று அமைதியா உட்கார்ந்து யோசை செய்து பாருங்கள் எனக்குத் தனிப்ட்ட முறையில் சில விஷயங்களில் ராமதாஸை பிடிக்கும் ஆனால் விடுதலைப்புலிக்கு ஆதரவு தறுவது இவைகள் எல்லாம் தேவையில்லை ஒருவர் கோவணம் கட்டவேனுமான்னு சொன்னார் உண்மையில் தமிழ் கடவுல் முருகன் கட்டியிருக்காராயில்லையா? அதை நாங்கள் சிறு வயதில் இன்டியன் டை என்போம்.சரி ஜோ நன்றி

என்னார்

 
21 செப்டம்பர், 2005 22:56 மணிக்கு, எழுதியவர்: Blogger ஜோ/Joe

இதே என்னார் "இந்தி அறிவே காரணம் " என்ற தனது பதிவில்...
"கருணாநிதி இன்று 'தன் பேரன் தயாநிதி மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டதற்கு அவரது இந்தி அறிவே காரணம்' என்கிறார்." -என்று குறிப்பிட்டிருக்கிறார் .கருணாநிதிக்கு வக்காலத்து வாங்க வரவில்லை ..ஆனால் கருணாநிதி இப்படிச்சொன்னார் என்று நிரூபிக்க முடியுமா? சும்மா உங்க இஷ்டத்துக்கு அவுத்து விடுரதா?

 
21 செப்டம்பர், 2005 23:01 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

இது அன்றைய பத்திரிக்கையில் வந்த செய்தி
யைவைத்து சொன்னேன் அந்த அவுத்துவுடுரவேலையெல்லாம் என்னிடம் கிடையாது.அதை அன்றே கேட்டிருக்லாமே
நன்பரே. சரி இந்தி படிக்க வேண்டாம் என போராடியவர்கள் ஏன் இந்தி படித்தார்கள் அவர்கள் முன்னேரவா?
என்னார்

 
21 செப்டம்பர், 2005 23:18 மணிக்கு, எழுதியவர்: Blogger ஜோ/Joe

என்றைய எந்த பத்திரிகையில்?தின மலர் அந்துமணி அவுத்து விட்டதா?

உம்மை யாரையா இந்தி படிக்க வேணாமென்று சொன்னது? தேவையானால் உம்ம சொந்த காசு போட்டு படிச்சுக்க வேண்டியது தானே? அதுக்காக எல்லோரும் கண்டிப்பா படிச்சுதான் ஆகணும்னா எதிர்க்கத்தான் செய்வோம் ..தயாநிதி மாறனுக்கு இந்தி தெரிந்தால் ஒன்றும் தப்பில்லை .ஆனால் தயாநிதி மாறனுக்கு இந்தி தெரியும் என்பதே கட்டுக்கதை .இதுவரை அவர் இந்தியில் பேசி யார் கேட்டது? நிரூபிக்க முடியுமா?

 
21 செப்டம்பர், 2005 23:25 மணிக்கு, எழுதியவர்: Blogger ஜோ/Joe

என்னார்,
அன்புமணி வேட்டி கட்டினா மட்டும் நீர் ராமதாஸ்-ஐ ஆதரிக்க போகிறீரா? தமிழுணர்வை குறை சொல்லுவதும் ,கிண்டலடிப்பதும் உங்கள் கூட்டத்தின் வேலை .அதற்கு ராமதாஸ் மாதிரி கோமாளிகள் உங்களுக்கு களமமைத்து தருகிறார்கள் .அவ்வளவு தான் .

 
22 செப்டம்பர், 2005 01:48 மணிக்கு, எழுதியவர்: Blogger -/பெயரிலி.

பெயர் பலகை
பா.மா.க... (பால்மாட்டுக்கட்சி?)
போகப்போராங்களா?
காப்பத்தப்
கட்டவேனுமான்னு
அவுத்துவுடுர
நன்பரே
முன்னேரவா?
கேட்டிருக்லாமே
என போராடியவர்கள்
தறுவது
இவைகள்
தமிழ் கடவுல்
சுட்டிக்காட்

குழந்தைக்குத் தமிழ் வெகுசுத்தம். குழந்தை கடை பெயர்-பலகை வைத்தால், அதிலே ஆங்கிலத்தைத் தார் பூசி அழிக்கமுன்னால், அதிலிருக்கும் (இருந்தால்) தமிழைத்தான் அழிக்கவேண்டும் ('அளிக்கவேண்டும்' என்று எழுதக்கூடாது), அல்லது இப்படி எழுதுகின்றவர்கள் பேசுகின்றவர்கள் கை, வாய் ஆகிய அங்கங்களிலே கொதிதார் ஊற்றி அழிக்கவேண்டும்.

இத்தனைக்குள் "பெரிசா வந்திட்டானுங்க தமிழைக் காப்பாற்றப் பேசுறதுக்கு, போராடுறதுக்கு" என்றுமட்டும் காட்டமாய்ப் பதிவு போட முடிகிறது.

 

Post a Comment

<< முகப்பு