அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வீரமங்கை வேலுநாச்சியார்



இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத மேந்திப் போராடிய முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார் 1730 இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் ஆண் வாரிசாக வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார். பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகெங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.

1772ல் வெள்ளைக்கார வெறியர்களின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வீரத்தாய் வேலுநாச்சியார். வெறியர்களின் கொட்டத்தை அடக்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து அவருக்கே தெரிந்த உருது மொழியில், வெள்ளையர் எதிர்ப்பு பற்றி திறமையாக அழகுற பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட, ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.

ஏழாண்டுகாலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம்மாறி மாறி முகாமிட்டு, வெள்ளையர்களை விவேகத்துடன் எதிர்த்தார். இதற்கிடையில் தமது எட்டுவயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகெங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சாகோதரர்களுடன், வேலுநாச்சியாரே போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

1780 ஐப்பசித் திங்கள் 5ம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகெங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி ஒத்துழைப்போடு பீரங்கிப்படை ஒன்றும் தரப்பட்டது. படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகெங்கையில் வேலுநாச்சியார் அவர்கள், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்டறை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார் நாச்சியார் தொடர்ந்து பூஜை செய்ய உத்திரவிட்டார்.

இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது பெரிய மருது, வேலுநாச்சியார் அவர்கள் தரைலமையில் படை திரட்டப்பட்டது.

சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் 'குயிலி' என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

வேலு நாச்சியார் கைபட்பற்றிய தமது நாட்டிற்கு பெரிய மருதுவை தளபதியாகவும், சின்னமருதுவை அமைச்சராகவும்த நியமித்தார். வேலுநாச்சியார் மகள் வெள்ளச்சிக்கும் சக்கந்தி வேங்கண் தேவருக்கும் திருமணம் செய்து வைத்தார். 1780-1789 வரை ஆட்சியில் இருந்தார். 1789-ல் மருமகனுக்கு ஆட்சிப்பொறுப்பை மாற்றிக் கொடுத்தார். 1790-ல் அவரது மகளின் மறைவினால் மடைமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காகபிரெஞ்சு நாட்டுக்குச் சென்றார்.

1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தி மரணம் நாச்சியாருக்கு துயரம் அதிதமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களையும் சோதனைகளையும் சாதனைகளாக்கி, வீரசாகசங்கள் புரிந்து நாட்டை மீட்டிய வீரத்தாய்
25-12-1796 அன்று இறந்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் வம்சாவழிப்பட்டியலை அரசாங்கத்தின் ஆவணக்காப்பகத்தின் தக்க ஆதாரங்களுடன் உண்மையினை நாட்டிலுள்ள அனைவரும் தெரிந்து கொள்ள அன்புடன் வெளியிடப்பட்டுள்ளது.

1ம்....1728 - 1749...முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2ம்....1749 - 1772...சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3ம்....1780 - 1789...வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4ம்....1790 - 1793...இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்
5ம்....1793 - 1801...வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் கணவர்
6ம்....1801 - 1829...கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின்
சுவீகார மைந்தன்
7ம்....1829 - 1831...உ.முத்துவடுகநாதத்வேர்
8ம்....1831 - 1841...மு. போதகுருசாமித்தேவர்
9ம்....1841 - 1848....போ. உடையணத்தேவர்
10ம்..1048 - 1863....மு.போதகுருசாமித்தேவர்
11ம்..1863 - 1877....ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
12ம்..1877..............முத்துவடுகநாதத்தேவர்
13ம்..1878 - 1883....துரைசிங்கராஜா
14ம்..1883 - 1898....து. உடையணராஜா
15ம்..1898 - 1941....தி. துரைசிங்கராஜா
16ம்..1941 - 1963....து. சண்முகராஜா
17ம்..1963 - 1985....து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா
18ம்..1986..............முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.

ennar

6மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Sri Rangan

மு.கருணாநிதி அவர்களின் வரலாற்று நாவல்களில் விரவிக்கிடக்கும் வரலாற்றுத் தமிழ் நாயகியைப் பதிவில் போட்டு கௌரவித்தற்கு நன்றி,இரத்தினவேலு.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

இது தேவர் பேரவை ஆண்டு மலரில் இருந்து எடுக்கப்பட்டது
நன்றி sri rangan அவர்களே
என்னார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger பரஞ்சோதி

தமிழ் கொடுத்த வீரப்பெண்மணியின் வரலாற்றை விபரமாக கொடுத்தற்கு நன்றி என்னார்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி நன்றி பரமஸ்
என்னார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger அப்துல் குத்தூஸ்

வீரமங்கை வேலுநாச்சியார் அம்மையாருக்கு அபயம் அளித்தவர் இஸ்லாமிய ஆட்சியாளர் திப்பு சுல்தான் என்று அல்லவா கேள்விபட்டேன்? தயவுசெய்து உங்களின் வரலாற்று குறிப்புகளை சரிபார்க்கவும்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

// வீரமங்கை வேலுநாச்சியார் அம்மையாருக்கு அபயம் அளித்தவர் இஸ்லாமிய ஆட்சியாளர் திப்பு சுல்தான் என்று அல்லவா கேள்விபட்டேன்? தயவுசெய்து உங்களின் வரலாற்று குறிப்புகளை சரிபார்க்கவும்//
மரத்தடி காமில் சுட்டது
மரத்தடியில் இதுவரை, சுதந்திரத்தில் பங்கு பெற்ற நான்கு தமிழ்ப் பெண் போராளிகள் பற்றி எழுதியாயிற்று. படிக்கப் படிக்க மெய் சிலிர்க்கும் இன்னும் சில தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்ல வேண்டி இருக்கிறது. இவர்களின் வாழ்க்கை இந்திய வரலாற்றில் ஒரு அத்தியாயம் என்பதை விட, சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெண் சுதந்திரம் என்ற வார்த்தையை சமூகம் எழுத்துக் கூட்டிப் படிக்கவே ஆரம்பித்திராத காலகட்டத்தில், போராடி ஜெயித்த இந்தப் பெண்களை, களத்திற்கு வந்து கைகளில் கல்வி என்னும் ஆயுதம் தாங்கி நின்று கொண்டிருக்கும் இன்றைய பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்.

புலியை முறத்தால் விரட்டிய பெண்மையும், தன் மகன் எங்கிருக்கிறான் எனக் கேட்டவரிடம், "அவன் நாட்டைக் காக்கும் வண்ணம் போர்க்களத்தில் இருந்தால்தான் என் பெற்ற வயிறு குளிரும்" என்ற பெண்மையும் வெறும் இலக்கிய அழகு மட்டுமில்லை. போராடத் துணியும் எந்தப் பெண்ணுக்குள்ளும் உரமூட்டுகிற செய்தியும்கூட. ராணி வேலுநாச்சியார் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒரு செய்தியே.

இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கும், சிவகங்கை அருகில் சக்கந்தி எனும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியாருக்கும் 1730ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தவர் வேலுநாச்சியார். செல்லமுத்து சேதுபதி தன் மகளுக்குப் போர்க்களம் சென்று வாளெடுத்துப் போர் புரியும் பயிற்சி அளித்து ஒரு சிறந்த வீராங்கனையாகவே வளர்த்தார். சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்துவடுகநாத தேவருக்கு, வேலுநாச்சியார் 1746ஆம் வருடம் திருமணம் செய்துகொடுக்கப்பட்டு, அவரின் பட்டத்து ராணி ஆனார். ராணி வேலுநாச்சியார் பல்வேறு மொழிகளில் புலமை பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

வேலுநாச்சியாரின் கணவர், மன்னர் முத்துவடுகநாதருக்கு ஆட்சியில் ஆலோசனைகள் வழங்கும் மந்திரிகளாக செயல்பட்ட தாண்டவராயப் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோருடன், வேலுநாச்சியாரும் கருத்துக்கள் கூறி உறுதுணையாக இருந்து வந்தார். இந்நிலையில் ஆற்காடு நவாப்புக்குக் கப்பம் கட்ட மறுத்த முத்துவடுகலநாதர் கும்பினிப் படை மற்றும் ஆற்காடு நவாப்பின் படைகளால் காளையார் கோவிலில் தன் இளைய மனைவி கௌரி நாச்சியாருடன் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது கொல்லப் பட்டார். அப்போது கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலுநாச்சியார் தன் மகள் வெள்ளச்சி நாச்சியார் மற்றும் தன் கணவர் ஆட்சியில் துணைபுரிந்து வந்த தாண்டவராயப் பிள்ளை, மருது சகோதரர்களுடன் அருகிலிருந்த விருப்பாச்சிக்குத் தப்பிச் சென்றார். விருப்பாச்சியின் பளையக்காரர் கோபால நாயக்கர் என்பவர் வேலுநாச்சியார் மற்றும் அவருடன் வந்தவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிட வசதி செய்து கொடுத்தார்.

அப்போது வேலுநச்சியார் சார்பாக தாண்டவராயப் பிள்ளை அன்றைய மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு ஒரு கடிதம் எழுதி அதில் ஹைதர் அலி தன்னிடமிருந்து 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும் அனுப்பி வைத்தால் அவர்களுடன் சேர்ந்து நவாப்புக்கு எதிராகப் போரிட்டு இராமநாதபுரம் மற்றும் சிவகங்கைச் சீமை ஆகியவற்றை ஆற்காடு நவாப் வசமிருந்து மீட்க முடியும் என நம்பிக்கை தெரிவித்து உதவி கோரினார். பின் தாண்டவராயப் பிள்ளையும் முதுமை காரணமாக இறந்துவிட, மருது சகோதரர்களின் துணையுடன், ஹைதர் அலி அளித்த பாதுகாப்பிலேயே விருப்பாச்சியில் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தார் வேலுநாச்சியார்.

சிவகங்கைச் சீமையை நவாப்பிடமிருந்து மீட்க, திண்டுக்கல் கோட்டையிலிருந்து குதிரைப் படைகளைப் பெற்றுச் செல்லுமாறு ஒருநாள் ஹைதர் அலியிடம் இருந்து வந்த செய்தியைக் கேட்டு, உடனே அப்படைகளைப் பெற்றுக் கொண்டு, தானே தலைமை ஏற்று மருது சகோதரர்கள் துணையுடன் சிவகங்கைச் சீமை நோக்கிப் படையெடுத்தார் ராணி. மதுரை கோச்சடை என்னுமிடத்தில் நவாப்பின் படைகளும், கும்பினிப் படைகளும் வேலுநாச்சியார் படைகளைத் தடைகள் அமைத்துத் தாக்கின ஆனால் ராணியின் படை அவர்களைத் திரும்பி ஓடச் செய்யுமளவு வீரமுடன் போரிட்டது. போரில் வெற்றி பெற வியூகம் அமைத்துச் செயல்பட்டார் அவர். சிவகங்கைப் படைப் பிரிவிற்குத் தானே தலைமையேற்றும், திருப்பத்தூர் படைக்கு நன்னியம்பலம் என்பவரைத் தலைவராக்கியும், காளையார் கோவில் படைப்பிரிவிற்கு மருது சகோதரர்களைத் தலைமை ஏற்கச் செய்தும் மும்முனைத் தாக்குதலை, நவாப்ப்க்கு எதிராக நடத்திப் போரில் வெற்றி வாகை சூடினார்.

இளவரசி வெள்ளச்சி நாச்சியாருடன் சிவகங்கைக் கோட்டைக்கு வந்த வேலுநாச்சியாரை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 1780ஆம் ஆண்டு சிவகங்கையின் அரசியாகத் தன் மகள் வெள்ளச்சி நாச்சியாரை அரியணையில் அமரவைத்து அழகு பார்த்த தாய் அவர். அத்தோடு நின்று விடாமல் தன் மகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வழிநடத்தவும் செய்தார். தனக்கு உதவி புரிந்த மருது சகோதரர்களுக்கும் உரிய பதவிகள் வழங்கி கௌரவித்திருந்தார். அப்போது சிவகங்கைச் சீமைக்கும், புதுக்கோட்டைத் தொண்டைமான் நாட்டிற்கும் இடையே ஏற்பட்ட எல்லைப் பிரச்சினையில், ராணியின் ஆலோசனையின்றி போரில் குதித்து விட்ட சின்ன மருதுவுடன் ராணி வேலுநாச்சியாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சிவகங்கைக் குடிமக்கள் இரு பிரிவினர் ஆயினர். சின்ன மருது ஆதரவாளர்களுக்கும், வேலுநாச்சியார் ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி ஏற்பட்ட மோதலில் ராணிக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்த ஆற்காடு நவாப் முகமது அலி ராணியுடன் உடன்பாடு செய்து கொண்டார்.1789ல் நவாப் சென்னை கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதித் தனக்கு உதவியாகக் கும்பினிப் படைகளைப் பெற்றுக் கொண்டு ராணியின் அனுமதியுடன் கொல்லங்குடியில் மருது சகோதரர்களைத் தாக்கினார். அதன் முடிவில் கொல்லங்குடிக் கோட்டை கும்பினித் தளபதி ஸ்டூவர்ட் வசமானது. தளபதிக்குக் கடிதம் எழுதிய வேலுநாச்சியார் மீண்டும் சிவகங்கைச் சீமையின் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஸ்டூவர்ட்டின் படைகள் காளையார் கோவில் பகுதிக்கும் முன்னேறி மருது சகோதரர்களை விரட்டியடித்தனர். சிவகங்கைக் கோட்டையிலும் கும்பினிப் படைகளே பாதுகாப்பிற்கு நின்றன. 5 மாதங்களுக்குப் பின் மருது சகோதரர்கள் மைசூர் மன்னர் திப்பு சுல்தானிடம் உதவிபெற்று படைதிரட்டி வந்து திருப்பத்தூர் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனர். மைசூர் மன்னன் திப்பு சுல்தானிடம் செய்து கொண்டிருந்த உடன்படிக்கை காரணமாக மருது சகோதர்களுடன் மீண்டும் போரைத் துவக்க விரும்பாத கும்பினிப் படையினர், அவர்களுடன் சமரச உடன்பாடு செய்யுமாறு நவாப்பை அறிவுறுத்தினர்.

இதற்கிடையில் ராணி வேலுநாச்சியார் தன் மகள் வெள்ளச்சி நாச்சியாரை சக்கந்தி வெங்கன் பெரிய உடையணத் தேவருக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1790ல் வெள்ளச்சி மரணமடைந்தார். அதற்குப் பின் சிவகங்கையில் சுமுகமான ஆட்சி அமைக்கும் வண்ணம், தான் பதவியில் இருந்து விலகி, தன் மருமகனை அரியணை ஏற்றினார். தளபதியாகப் பெரிய மருதுவும், பிரதானியாகச் சின்ன மருதுவும் பொறுப்பு வகிக்கட்டும் என்ற நவாப் மற்றும் கும்பினிப் படையின் சமரசத் திட்டத்தை ராணியும் ஏற்றுக் கொண்டார்.

கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து சிவகங்கைச் சீமையைச் செம்மையாக வைத்திருந்த ராணி வேலுநாச்சியார் தன் 66ஆம் வயதில் 1796ல் இறந்தார். தன் கணவரை ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆக்கிரமிப்பாளர்களுக்குக் காளையார் கோவில் போரில் காவு கொடுத்து விட்டு, துவண்டு போய் மூலையில் அமர்ந்து விடாமல் சிவகங்கைச் சீமையை மீட்டெடுக்கப் போராடிய இந்த வீரமங்கையின் சிலை மருது சகோதரர்கள் சிலைகளுடன், காளையார் கோவில் சிற்பத்தில் கம்பீரமாய் நிற்கிறது.

எனனார்

 

Post a Comment

<< முகப்பு