அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

சதாம் உசேன் 1லட்சத்து 82ஆயிரம்பேரை கொன்றார்

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டு அங்கு புதிய ஆட்சி நடக்கிறது. சதாம் ஆட்சி காலத்தில் நடந்த கொடு மைகள், இவர் செய்த படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஒருவர் சதாம் உசேன் இருக்கும் சிறைக்கு சென்று அவரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கினார்.
அப்போது நீதிபதியிடம் சதாம் உசேன், எனது ஆட்சியில் 1 லட்சத்து 82 ஆயிரம் குர்திஷ் இன மக்களை கொன்று குவித்தேன். நூற்றுக்கணக்கான குர்து இன மக்கள் வசிக்கும் கிராமங்களை அழித்து விடவும் உத்தரவிட்டேன் என்று தெரிவித்தார்.
சதாம் உசேனிடம் ரகசிய வாக்கு மூலம் வாங்கிய நீதிபதியும் குர்து இனத்தை சேர்ந்தவர்தான்.
சதாம் உசேன் ரகசிய வாக்கு மூலம் அளித்ததை நீதிபதி அந்த நாட்டு அதிபர் ஜலால் தலாபானியிடம் தெரிவித்துள்ளார்.
சதாம் உசேன் நீதிபதியிடம் அளித்த வாக்கு மூலத்தை அதிபர் தலாபானி டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியிலும் தெரிவித்து விட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சதாம் உசேன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
அதிபர் தலாபானி கூறும்போது, சதாம் உசேன் இந்த நீதிபதியை கொல்ல 20 முறை முயற்சி செய்தார். ஆனால் அது நடைபெறவில்லை.
இதற்காக அவரை 20 முறை தூக்கில் போடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு