அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

காவிரியில் வெள்ள அபாயம்

இன்று காலை 4.30 மணியளவில் மொத்த கொள்ளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை. சென்ற 2000 தான் அணை நிரைந்தது தற்போது 34 ஆயிரம் கணஅடி தண்ணீர் வருகிறது.
மகாராஸ்டிரத்தில் வெள்ளம் கர்னடாகவில் வெள்ளம் இப்போது இங்கா? வேண்டாம்.

போதும் வர்ணபகவானுக்கு கடகடா கட் தந்தி கொடுங்கள்
இனிமேல் நமது அரசியல் வாதிகள் காவிரியை மறந்துவிடுவார்கள் . அடுத்தண்டுதான் இந்த நினைப்புவரும்.
கொஞ்சம் மத்திய அரசுக்கும் கர்னாடகா அரசுக்கும் நிம்மதி.
"பாருங்கள்! பாருங்கள்!! மத்தியில் எங்கள் ஆட்சி வந்ததால் தான் காவிரி நிரைந்தது". காங்கிரஸ்
"அம்மா தண்ணீர் பிரதமரிடம் கேட்டார், அவர் கண்டுகவேயில்ல!! அதனால் அன்னை மாதா மழைபொழிய வைத்தாள்" : அதிமுக
"எங்..க..ள்..கூ..ட்..டா..ட்..சி...யா..ல்..தா..ன்..ம..ழை..பொ..ழி..ந்..து. மேட்டூர் அணைநிரம்பியது" : திமுக

2மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Machi

வெள்ளப்பெருக்கு அழிவை ஏற்படுத்தும் இயற்கை தாண்டவம். வெறுக்க கூடியவொன்று. ஆனால் காவேரியில் வெள்ளம் என்பது ஒரு வகையில் வருத்தத்துடன் எனக்கு மகிழ்வை தருகிறது. பின்ன காவேரியில் தண்ணியை பார்க்கிறதுன்னா சும்மாவா? நம்ம நிலைமை விரைவில் மாறுவதாக... நதி நீர் இணைப்பாலோ அல்லது மழைக்கடவுளின் கருணையினாலோ.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சில நன்மைகளை அடைய சில கஷ்டங்களையும் பொருத்துக்கொள்ளத்தான் வேண்டும்

என்னார்

 

Post a Comment

<< முகப்பு