அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கைகேயி



சணிபகவான் சடுதியில் அயோத்தி சிம்மாசனத்தை பிடிப்பான் என உணர்ந்த கைகேயி

தான் பெற்றெடுக்காத தன் மகனையும், மணாளனையும் காக்க

தான்பெற்ற தன் மகனையே பழிகொடுக்க நினைத்து பழிச்சொல்லில்

அகப்பட்டாள் அண்ணையவள்

ஆடி முன்னின்ற அழகு பார்த்த மாமன்னர் கண்டான்!

காலன் அனுப்பிய கடுதாசியை

வேறொன்றுமில்லை வேலை வந்துவிட்டது நீ காடேக!

நரை காட்டியது முதுமையென

காலமாகும் வரை காட்டில் காலந்தல்ல வேண்டியது அக்கால மரபு.

கலங்கினாள் அழுதாள் இறைவனைத் தொழுதாள் வேறு வழியில்லையா?

என தனக்குத்தானே கேள்வியும் பதிலுமாய்; தேரினாள் ;

தேரினாள் மன்னனிடம் வரம்பெற்ற உத்தமி.

அப்போடு தான்பெற்ற தங்கமகனை பிரிந்து காணகம் சென்றால் இறந்தல்லவா போவார்

பிரிவு தாளாமல். ஆம் இது தான் வழி ஈரேழு ஆண்டுகள் ராமசூரியன் காடாளவும் பரதன் நாடாளவும் காணகத்தில் தந்தையும் மகனும் இணைந்திருக்கட்டுமே !! அதற்குள் சணிபார்வையும் போய்விடும். சொன்னால் கேட்க மாட்டாரே!! என அன்று சண்டைத்தேரில் பெற்றவாக்குறுதியை நிலைநாட்டி முத்தாலியையும் நிலைநாட்ட முனைந்தாள்.

விதி செய்த சதியை இச்சதியால் முடியுமா? முடியவில்லை எல்லாம் விதி வழியே நடந்து முடிந்தது

வந்தான் பரதன் அன்னையை ஏசினான்,பேசினான், ஓடினான் அண்ணன் ராமன் சென்ற காட்டிற்கு வழியில் கண்டான்," அண்ணா நீ யில்லத இடத்தில் நானா? "என கேட்டு ,

"உனது பாதுகைகளைக்கொடு அது இந்த நாடாளட்டும் எனக்கு அரசுரிமை வேண்டாம்."

பாதுகையை பெற்று வந்து

பெற்ற மகனையே சணிக்கு தாரைவார்க்கும் தாயே!! நான் நாடாண்டால் என்னவாகும் தெரியுமா உனக்கு, நாசமா போவேன். உன் மகன் செருப்பை வைக்கிறேன் அவன் படும் பாட்டைப்பார்."

அந்த செருப்பு நாடாண்டதற்கே அச்செருப்புக்குச்சொந்தகாரன் ராமன் பட்ட பாடு உலகறியும் மன்னன் ஆண்டால்?.

வாலி:"ராமா உன் மனைவி ஒருத்திக்காக இத்தனைபேரைக்கொன்றாயே! கோழை நேருக்நேர் நின்று போரிட வக்கற்ற நீ எப்படி சக்ரவர்த்தி திருமகனாய்ப் வளந்தாய். உன் மனைவி வேண்டு மென்று என்னிடம் சொல்லியிருந்தால் இங்கிருந்து ஒருகுரல் கொடுத்தாலே இராவணன் உன் மனைவியை கொண்டு வந்து விட்டிருப்பானே!! . சூரிய குலத்தில் பிறந்த நீ இனி ராமசூரியன் இல்லை குற்றமுள்ள சந்திரன் ராமசந்திரன் இந்த பெயர் தான் உனக்கு நிலைத்து நிற்கும்."





5மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger dondu(#11168674346665545885)

கைகேயி பற்றி நான் வாய்ஸ் ஆன் விங்க்ஸின் ஆங்கிலப் பதிவு ஒன்றில் கீழ்க்கண்டப் பின்னூட்டம் இட்டேன். பார்க்க:
http://voiceonwings.blogspot.com/2005/02/kaikeyi-mother.html#comments

"Actually, Kaikeyi is a complex character. She loved Rama very much and her love was returned, till the day of her asking the boons. In fact, when Mantara tells her of the impending coronation of Rama, her first reaction was unadultrated joy. It was only after Mantara's ill-advise that she turned against Rama. Here we have to see the inevitable hand of fate. Just consider. Had she not asked these boons, Rama would have become king and Sita would not have been abducted. Then how could Ravana be killed? After all that was the aim of Ramavatar.
Once the banishment of Rama becomes irreversible, Kaikeyi wakes up from her dream and she is the most distressed person in Ayodhya. She accompanies Bharat to the forest and begs Rama to return.

There is another version to the events in one of the Ramayanas. It seems that Shani Bhagwan comes to her in disguise and tells her that he was going to cast his spell on Ayodhya for the next 14 years. Kaikeyi, not wanting to have her beloved Rama face problems, decides to put her own son at the helm of affairs, so that any problem on account of Shani will not touch her beloved Rama. How about it?"
அது இருக்கட்டும். உங்கள் இப்பதிவில் நீங்கள் ராமரை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

//There is another version to the events in one of the Ramayanas. It seems that Shani Bhagwan comes to her in disguise and tells her that he was going to cast his spell on Ayodhya for the next 14 years. Kaikeyi, not wanting to have her beloved Rama face problems, decides to put her own son at the helm of affairs, so that any problem on account of Shani will not touch her beloved Rama. How about it?"//


ஆமாம் அது என்ன சார் இருவருக்கும் ஓரளவிற்கு ஒற்றுமையிருக்கும் போலிருக்கே நான் இதற்கு முன் உங்கள் ஆங்கில பதிவை படிக்க வில்லையே.
நான் ஒரு இந்து அந்த வகையில் ராமரை ஏற்கிறேன். சிவனைத்தான் வணங்குகிறேன் சிவத்தொண்டனை அழித்த வகையில் எனக்கு ராமன் மேல் கோபம். எனது ஆக்கத்திற்கு வேறு ஒன்றும் காரணமில்லை அது ஒரு எண்ணக் கிறுக்கல் அவ்வளவுதான்.

என்னார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஜென்ராம்

//நான் ஒரு இந்து.அந்த வகையில் ராமரை ஏற்கிறேன். சிவனைத்தான் வணங்குகிறேன் சிவத்தொண்டனை அழித்த வகையில் எனக்கு ராமன் மேல் கோபம்.// உங்கள் இந்தக் கருத்தைப் பார்க்கும்போது சைவம், வைணவம் என்ற மதங்கள் தான் தெரிகிறது.. இந்து என்று ஒரு மதமே இல்லை என்ற கருத்துக்கு வலுவூட்டுகிறது.. உங்கள் கருத்தும் அதுதானா திரு. என்னார்?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger dondu(#11168674346665545885)

"ஆமாம் அது என்ன சார் இருவருக்கும் ஓரளவிற்கு ஒற்றுமையிருக்கும் போலிருக்கே நான் இதற்கு முன் உங்கள் ஆங்கில பதிவை படிக்க வில்லையே."

சொல்லப்போனால் நானும் என்னார்தானே (N.Raghavan). மேலும் அது என்னுடைய ஆங்கிலப் பதிவல்ல. வாய்ஸ் ஆன் விங்க்ஸின் ஆங்கிலப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் அது.

"சிவத்தொண்டனை அழித்த வகையில் எனக்கு ராமன் மேல் கோபம்."
சிவத் தொண்டனானாலும் சிவனே அவன் செய்ததை ஒப்புக் கொள்ளவில்லையே. மேலும் ராமரின் இஷ்ட தெய்வமும் சிவன்தான் என்பதை அறிவீர்களா?

ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் ராமர் ராமேஸ்வரம் பெயர்க்காரணம் அனுமனுக்கு கூறுகிறார்.

அதாவது யார் ராமனுக்கு ஈஸ்வரனோ அவனே ராமேஸ்வரன் என்று. ராமனின் பூஜையை சிவனும் பார்வதியும் வானுலகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது சிவன் பார்வதியை நோக்கிக் கூறுகிறார்: "உமா, பார்த்தாயா எவ்வாறு என் பிரபு ராமபிரான் ராமேஸ்வரனின் அர்த்தத்தை சாமர்த்தியமாக மாறி விட்டார்" என்று. விஷ்ணுவின் தங்கை பார்வதிக்கு அண்ணன் புகழ் கேட்டு ஒரே பெருமை. இருப்பினும் தெரியாதது போலக் கேட்கிறார்.

"அப்படியா சுவாமி, ராமேஸ்வரன் யார் என்று நீங்கள் கூறுங்களேன்" என்று. அதற்கு சிவன் அவர்கள் கூறுகிறார். "யாருடைய ஈஸ்வரன் ராமனோ அவனே ராமேஸ்வரன்" என்று.

ராமர் கீழிருந்து வானத்தை நோக்கி வணங்க, சிவன் வானத்திலிருந்து அவருக்கு பதில் வணக்கம் போடுகிறார்.
ஹிந்தி எனக்கு நன்றாகத் தெரியுமாதலால் நான் இக்காட்சியை முழுமையாக ரசித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

இச்செய்தி இதுநாள் வரை நான் கேள்விப்படவில்லை.தெரியாததை தெரியபடுத்தியமைக்கு நன்றி




இலங்கேஸ்வரன் = ராமேஸ்வரன்
நடேசன் இரத்தினவேலு - சிவன்
நரசிம்மன் ராகவன் - விஷ்ணு
பொருத்தம் தான்.

 

Post a Comment

<< முகப்பு