அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

அமெரிக்காவைக் காண வந்த கொலம்பஸுக்கு சோதணை

அமெரிக்காவைக் கண்டு பிடிக்க மாலுமித் தலைவர் கொலம்பஸ் ஸ்பெயன் நாட்டிலிருந்து இருபது மாலுமிகளுடன் சிறிய கப்பலில்கடல் பயணம் பசிபிக் பெருங்கடலில் தொடங்கியது.
சுற்றிலும் கடல். . . கடல் . . . . . கடல் தவிற வேறு எதுவும் இல்லை. இவ்விதம் 24 நாட்கள் கழிந்தன. கண்ணுக்கெட்டியதூரம் வரை கரை தென்படவில்லை.
கப்பலில் இருப்பவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்க அதிகாரி ஒருவர் இருந்தார் அவர் பெயர் ரொனால்டு இது வரை பயணித்தது 24 நாட்கள் ஆகிவிட்டது ; கப்பலில் இருக்கும் உணவு அத்தனை பயணிகளுக்கும் எத்தனை நாட்களுக்கு வரும் என கணக்குப் பார்த்தார், அது 20 மாலுமிகளுக்கும் 24 நாட்களுக்கு மட்டுமே வரும் என தெரிந்தது.
இது வரை கரை காணவில்லை இனி கப்பலை புறப்பட்ட இடத்தை அடைய இன்னும் 24 நாட்களாகும். எனவே உடனே திரும்ப முடிவெடுத்தார்.
உயிர் மீது ஆசை கொண்ட சில மாலுமிகள் ரொனால்டு கருத்தை ஆமோதித்தனர். கொலம்பஸ் தவிர, கப்பலில் இருந்து 19 பேரும் கப்பலை திருப்ப முடிவெடுத்தனர், இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமல் மேல் தளத்தில் இருந்து கரை தெரிகிறதா? என்று பார்த்ததுக் கொண்டிருந்தார் கொலம்பஸ், அவரிடம் விஷயத்தை கூறினர்.
'அமெரிக்காவைக் காணவேண்டும் என்பது உயரிய லட்சியம் உணவும் தண்ணீரும் அதில் குறுக்கிடுவதா? புதிய உலகம் காண புறப்பட்ட பாதையைமாற்றுவதா? என்று யோசித்தார். கோழை உள்ளம் கொண்டவர்களைக் கண்டு அனுதாபப்பட்டார். "எக்காரணம் கொண்டும் பின்வாங்குவதில்லை. கப்பல் முன்னோகக்கிதான் செல்லும். நடப்பது நடக்கட்டும்" என்றார்.
அவரது கட்டளை புறக்கணிக்கப்பட்டது. டஸ்பெயின் திரும்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கொலம்பஸ் அதிர்ந்தார், எதிர்ப்பு தெரிவித்தார் இதனால் அவரது தலைமைப் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது. அவரை கைது செய்ய மற்ற மாலுமிகள் உத்தரவிட்டனர். கப்பல் தளத்திலேயே சிறைவைக்கப்பட்டார்.
தலைமைப் பதவியை ரொனால்டு எடுத்துக் கொண்டார். கைகள் கட்டப்பட்ட நிலையிலும், கொலம்பஸ் சோர்ந்து விடவில்லை. அவரது சிந்தனையில் புது யோசனை தோன்றியது. ரொனால்டை அழைத்தார். "கப்பலில் இருக்கும் உணவு இருபது பேருக்கு 24 நாட்களுக்கு வரும் . அந்த இருபது பேரில் நானும் ஒருவன் , ஒருவேளை நான் சாப்பிடாமலும், நீர் அருந்தாமலும் இருந்தால் என் 24 நாட்களுக்கான உணவும் நீரும் உங்கள் 19 பேருக்கும் ஒரு நாளைக்கு போதுமே . எனவே கப்பலை மேலும் ஒருநாள் முன்னோக்கி செலுத்துங்கள் . இந்த ஒரு நாளில் ஒருவேளை கரைஎதுவும் நாம் காணாவிட்டால் என்னை கடலில் தள்ளிவிடுங்கள் அதனால் மிச்சமாகும் உணவும் நீரும் ஊர் போய்ச் சேரும் வரை உங்களுக்கு போதும்" என்றார்.
மாலுமிகளுக்கு கணக்கும் பரிந்தது. தங்கள் கடமையும் புரிந்தது. கொலம்பசை அவிழ்த்து விட்டனர் கப்பல் முன்னோக்கிநகர்ந்தது.
இருபதே மணிநேரத்தில் . . .கரை தெரிந்தது. அதுதான் அமெரிக்கா!
சிக்கலான சூழ்நிலையிலும் கூடதன் இலக்கை மாற்றிக்கொள்ள கொலம்பஸ் தயாராக இல்லை. அவரது உள்ளத்தில் இருந்த உறுதிதான் வரலாற்றில் கொலம்பசுக்கு நீங்காத இடத்டதை தந்திருக்கிறது.

அது சரி அந்த இடத்திலிருந்து ஒரு நாள் பயனித்தால் திரும்ப ஒருநாள் ஆக இரண்டுநாளாகும்




1மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

தேடிப் போனது இந்தியா ஆனால் கண்டது அமெரிக்கா அங்குள்ளவர்களை அவர் செவ்விந்தியர் என பெயரிட்டு அழைத்தார்.
என்னார்

 

Post a Comment

<< முகப்பு