அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

இராமேச்சுரம்

1911 ஆம் ஆண்டு சூன் திங்கள் இராமநாதபுரம் மாவட்டம் அமைக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்துடன் இணைந்திருந்த சாத்தூர், திருவில்லிபுத்தூர் வட்டங்களையும், மதுரையுடன் இணைந்திருந்த சிவகங்கைப் பகுதியையும் இணைத்து இராமநாதபுர மாக்கினர்.

நாடு விடுதலை பெற்ற பின்னர் மக்களாட்சி(15-8-1948) மலர்ந்தது. தொன்மைச் சிறப்பு வாய்ந்த, தென்னகத்திலேயே மிகப் பெரிய சமீனாக இருந்து வந்த சேதுபதிகளின் உரிமையை 7-9-1949 இல் சமீன் ஒழிப்பு முறையில் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. நட்ட ஈடாக நாற்பத்து ஏழு இலட்சம் வெண்பொற்காசுகள் சேதுபதி குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

அறுபத்து நான்னு பீடங்களில் இராமநாதபுரமும் ஒன்றாகும். நெடுங்காலமாகவே பல துறவிகள் வாழ்ந்த இடமுமாகும். 1581 ல் தாயுமான சுவாமிகள் இறுதிக் காலத்தில் சிறப்பெய்திய இடம். எண்ணற்ற துறவிகளும், யோகிகளும் வாழ்ந்த பல இடங்கள் முகவைக்குப் பெருமை சேர்க்கின்றன. அவைகளில் குறிப்பிடத்தக்கது இராமேச்சுரம் ஆகும். "இமசேது" என வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அணையே இமயமும் சேதுவாம் இராமேச்சுரமுமாம்! இவ்விணைப்பே இராமேச்சுரத்தின் இணையிலாப் பெருமையை விளக்கும்.

"தேவியை வவ்விய தென்னிலனங்கைத்தச மாமுகன்

பூவியலும் முடிபொன்று வித்தபடி போயற

ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்" தேவாரம்.

பழமைக்கும் பழமையான பெருமையுடைய

இராமேச்சுரம் சேதுபதிகளின் சிறப்பனைத்திற்கும்

உரித்தானவையாக இருந்தது. முகவையுடன் இணைந்தே இருந்தது.

கோயில் கடற்கற்களால் அமைந்திருந்தது அம்பா சமுத்திரத்திலிருந்து கருங்கல்லைத் தயாரித்து மாட்டு வண்டிகளில் கொண்டு வந்து "இராமநாதர்" "பர்வதவர்த்தனி" என்ற பாய்மரத் தோணியில் தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இராமேச்சுரம் கொண்டுவந்து கோயிலைப் புதுப்பித்துக் கட்டப்பட்டது சேதுபதிகளால்.

கோவில் மூன்றாம் சுற்றுப்பிரகாரம் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது..

கி.பி. 1480 இல் வங்கக் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு மிகப் பயங்கரமான புயலாக வீசியது. அதன் காரணமாக இராமநாதபுரத்துடன் இணைந்திருந்த இராமமேச்சுவரம் சிறு தீவு ஆனது.

1964 திசம்பர் 23 இல் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் இராமேச்சுவரத்துடன் இணைந்திருந்த தனுக்கோடி துண்டிக்கப் பட்டது. பாம்பன் பாலமும் சேதமானது.


0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு