அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

புதன், ஜூலை 20, 2005

தாஜ்மகால் யாருடையது

தாஜ்மகால் யார் செர்த்து என்ற தலைப்பில் திருச்சி டி.கே.எஸ் .கவிதா எழுதிய கடிதத்தை தினமலரில் பார்த்தேன் .


அவர்,"சில இஸ்லாமிய அமைப்புகள் தாஜ்மகாலை தங்கள் உரிமை என்று சொந்தம் கொண்டாட ஆரம்பிதுள்ளன. யார் சொத்தை யார் உரிமை கொண்டாடுவது?


தாஜ்மகாலைக் கட்டத் தீர்மானித்தது வேண்டுமானால் முகலாய மன்னனான ஷாஜகானாக இருக்கலாம் அதைக் கட்ட செலவு செய்யப்பட்ட பணம் அவன் உழைத்து சம்பாதித்த பணமா, அல்லது அவனது பாட்டன் சொத்தா? அதைக் கட்டுவதற்கான உடலுழைப்பை அளித்தது அவனது ரத்தபந்தமா?


ஒண்டவந்த ஒட்டகம் வீட்டையே ஆக்கிரமித்த கதையாக பாரதத்தில் புகுந்து ஆதிக்க ஆட்சியை நடத்திய முகலாயனான ஷாஜகான், இங்கிருந்த மக்களை அநியாயமாகக் கொள்ளையடித்து அராஜகமாக மிரட்டி கட்டப்பட்டுள்ளதுதான் தாஜ்மகால்.


மன்னராட்சிக்கு முடிவுகட்டப்பட்டு மக்களாட்சி வந்தபிறகு. அந்த சொத்துகள் எல்லாம் அரசின் சொத்துகளாக. மாறிவிட்டன தாஜ்மகாலும் அப்படித்தான் பிறகு எப்படி அதில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு உரிமை வந்தது?


இந்தப் பிரச்சனையைக் கோர்ட் படியேற்றியதே தவறு தாஜ்மகால் இந்திய அரசின் சொத்து என்று ஒரு அரசாணையை மத்திய அரசு உடனடியாக வெளியிட்டு இந்த விவஸ்தை கெட்ட உரிமை கோரலுக்கு நிரந்தர முடிவுகட்டவேண்டும்.


தாஜ்மகால் சர்ச்சையை அரசாணையால் நிறுத்தாவிட்டால், செங்கோட்டை போன்ற வற்றையும் தங்கள் சொத்து என்று சில கூட்டங்கள் உரிமைகோரிவிடும். உஷாராக., உறுதியாக செயல்படட்டும் அரசு!" எனக்கூறியுள்ளார்.

தாஜ்மகால் கட்டப்பட்டுள்ள இடத்தில் சிவன்கேவில் இருந்ததாக ஒரு வலை தளத்தில் பார்த்தேன் .


சாலைகள் அமைத்து மரங்களை நட்டவர் அசோகர் எனவே புத்தமதத்தினர் சாலைகளும் மரங்களும் தங்களது எனவும் கேட்டுவிடப் போகிறார்கள்!!!.


நான்கு பேர் சேர்ந்து ஒரு சின்ன வேப்பமரம் வைத்து அதில் சிறிய கட்டிடம் கட்டி கோவிலாக்கி ஒரு உண்டியல் வைத்தால் உடனே அறநிலயத்துறை அங்கு வந்து விடும்

கோடி கோடி யாய் சம்பாதிக்கும் முஸ்லீம் இடமோ , கிறித்தவரிடமோ போகாது. ஏன் இப்படி?


வெள்ளையராட்சியால் ஏற்பட்ட நன்மை இது தான் மன்னர்களை நீக்கி மக்களாட்சி அமைவதற்கு வழிவகுத்தது.


இல்லையென்றால் திருச்சியில் ஒரு மன்னன் தஞ்சையில் ஒரு மன்னன் என ஊருக்கொரு ராஜா இருந்திருப்பார் நாடு விளங்கியிருக்கும் .


நம்மை பல ஆண்டுகள் வெள்ளையர் ஆண்டாலும் ஒற்றுமையை ஏற்படுத்திவிட்டு சென்றான். united states of India .


என்னார்


1மறுமொழிகள்:

20 ஜூலை, 2005 16:26 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

முகமூடி என்ன சொல்கிறீர்
என்னார்

 

Post a Comment

<< முகப்பு