அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மனிதர்களின் இயல்பு

நாம் ஒரு ஊருக்குச் செல்ல பேரூந்து நிருத்தத்தில் நிற்கிறோம் நாம் செல்லவேண்டிய திசைக்கு எதிர் திசையில் அப்பொழுது பேரூந்துகள் வரிசையா வரும் ஆனால் நாம் செல்லவேண்டி திசைக்கு மட்டும் அவ்வளவு சீக்கிரம் பேரூந்து வராது. சிலர் சில வேலைகளில் விடிந்தால் அந்த செயலை செய்யலாம் என ஆவலாக இருந்தால் சீக்கிரம் விடியாது போல் தோன்றும் அதைப்பற்றி இந்த அம்மணி ஒரு பாடல் பாடுகிறார் பாருங்கள்

'ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ? யான் வளர்த்த
கோழிவாய் மண்கூறு கொண்டதோ? - ஊழி
திரண்டதோ கங்குல்? தினகரனும் தேரும்
உருண்டதோ பாதாளத் துள்'





- என்று ஆத்திரப் படுகிறாள் ஒருத்தி.

'
இந்தக் கடல் முழக்கம் அடங்காதா? நான் வளர்த்த கோழியின் வாயில் மண் அடைத்து விட்டதா? அது கூவினால் இரவு கழிந்து, விடிந்து விடுமல்லவா? ஒருவேளை உலகம் அழியக் கூடிய ஊழிக்காலம் வந்து விட்டதா? அதனால்தான் இப்படி முடிவற்ற இரவாக இருக்கிறதா?
சூரியனும் அவனது தேரும் பாதாளத்துக்குள் உருண்டு விழுந்து விட்டனவா?' என்று எரிச்சல் படுகிறாள்.

8மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

அன்பு என்னார்,
நன்றாக இருக்கிறது.
இது எந்தப் பாடல்?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றிசார்
பார்த்துச் சொல்கிறேன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger SP.VR. SUBBIAH

மனிதனுக்குத் தான் எண்ணியதெல்லாம் எண்ணியபடி நடக்கவேண்டும் என்ற இயல்பு உண்டு
அதன் வெளிப்பாடுதான் இம்மாதிரிப் பாடல்கள்
பாடல் சிறப்பாக உள்ளது, நன்றி!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

தலைவரே பாடல் பிரமாதம் !!எங்கேயிருந்து பிடிச்சீங்க?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

1.சுப்பையா சார்
2.வைசா பார்த்தேன் படித்தேன்
3.நடேசன்

அனைவருக்கும் நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger குமரன் (Kumaran)

என்னார் ஐயா. மிகச் சுவையான பாடல் இது. அண்மையில் இன்னொரு வலைப்பதிவிலும் இந்தப் பாடலைப் படித்ததாக நினைவு. அந்த வலைப்பதிவர் இந்தப் பாடல் காதலனை எதிர் நோக்கிக் காத்திருக்கும் காதலி எழுதியது என்று சொல்லியிருந்தார். பாடலையும் காதலனுக்கு ஏற்பப் பொருள் சொல்லியிருந்தார்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

குமரன்
நன்றி தாங்கள் சொல்வது உண்மைதான்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Kalaimahan

இந்தப் பாடலை இயற்றியவர் ஒப்பிலாமணிப் புலவர்.

 

Post a Comment

<< முகப்பு