அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 19 -

இனி, நாட்டுக் கூட்டத்தின் இயல்பினைச் சிறிது விளக்குதும்.

தஞ்சை சில்லாக் கெசட்டியரில் (1906) பின் வருமாறுகூறப் பெற்றுளது.

" கள்ளர் நாடுகளில் கிராமப் பஞ்சாயத்து வழக்கமாக இருந்து வந்தது. வேளாளர் பழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தமையால் இது நின்றுவிட்டது. கிராமத்தில் முக்கியமானவர் அம்பலகாரர் எனப்படுவர். இவர் ஊரிலுள்ள சில்லசைச் சச்சரவுகளைத் தீர்த்து வைப்பர். ஏனையரில் மேலாபனவராகக் கொள்ளப்படுவர். சில சமயங்களில் பல கிராமப் பஞ்சாயத்தார்கள் ஒன்றுகூடிப் பொதுக் காரியங்களை ஆராய்வதுண்டு".


தென்னிந்திய சாதி வகுப்பு வரலாறு என்னும் ஆங்கிலப் புத்தகத்தில்,


"சிவகங்கை ஜமீன்தாரியில் பதினான்கு நாடுகள் உள்ளன. பதினான்கு நாடுகளின் பிரதிநிதிகளும் ஆண்டிற்கு ஒருமுறை சுவர்ணமூர்த்தி சுவாமியினன் திருவிழா விடயமாய்க் கண்டதேவியில் கூடுவது வழக்கம்" என்று குறித்திருக்கிறது.


"வெள்ளூர் நாடு ஐந்து மாகாணங்களையுடையது. பதினொரு கரைகளாகப் பிரிக்கப்ட்டிருப்பது. ஒருகரைக்கு இரண்டு கரையம்பலமாகும். நாட்டுத்தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவர். மாகாணக்கூட்டம், நாட்டுக்கூட்டம் என இருவகைக் கூட்டங்கள் உண்டு. ஒரு அம்பலமும், கடிகளும் கூடுவது மாகாணக்கூடம். நாட்டுக்கூட்டம் என்பது நாட்டுத்தலைரும், இருபத்திரண்டு கரையம்பலங்களும் மற்றைய குடிகளும் கூடுவதாகும். நீதி (சிவில்) வழக்கு, குற்ற (கிரிமினல்) வழக்குகளைத் தீர்க்கம் கழகங்கள் (பஞ்சாயத்து) அங்கு உள்ளன" என்னும் இச்செய்தி முன்பும் காட்டப்பெற்றுள்ளது.


"ஐந்து கிராமத்தினர் ஒன்று சேர்ந்து காங்கயன் என்பானைத் தலைமையாக ஏற்படுத்தினரென்றும், அதற்காகச் சற்றிலுமுள்ள நான்கு கிராமத்தினன் அதிகாரிகள் காங்கயனையும், அவனைச் சேர்ந்தவர்களையும் தாக்தகினரென்றும், பின்ப இந்நால்வரும் காங்கயனால் தோல்வியுற்றுத் தலைக்கு ஒரு மாநிலம் கோயிலுக்குக் கொடுக்க வேண்டியதாயிற்று என்றும் நெடுங்குடிக் கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கிறது".

"இவர்களில் தலைவர்களை ஏற்படுத்துவதில் தேந்தெடுப்பு (எலக்ஷன்) நடந்து வந்தது. நந்தவனபட்படி மேல்ண்டான் என்ற தலைவன் ஒருகால்தன்றம்பியொடும்ஈ மற்றமுள்ள துணைவர்களோடும் வெளிச்செல்ல நேர்ந்தபொழுது, மேல்கொண்டானடைய அத்தையை அத்தலைமை யேற்றுக்கொள்ளும்படி செய்தனர், அம்மாது நியாயவிசாரணையிலும், காரிய நிர்வாகத்திலும் அவ்வளவு திறமை வாய்த்திருந்தனள். இக்கூட்டத்திற்கு

(கான்பிடரேஷனக்கு) மதுரை அரசர் தலைமையில் உதவி கிடைத்து வந்தது. மதுரையின் பிரதிநிதிகள் திருச்சிராப்பள்ளியில் இருந்துகொண்டு வரி வாங்கி இக்கூட்டத் தலைவர்களுக்குக் கொடுத்து வந்தனர். சிலர் இக் கூட்டத்தினரால் சிற்சில துன்பங்கள் உண்டாயின என்று நினைத்தாலும், இக்கூட்டத்தினர் பலமடைந்து ஒற்றுமையுடனிருந்ததால் திருச்சிக்கோட்டைக்கு முன்பு அவர்கள் உதவி செய்தது போல் எப்பொழுதும் உதவி செய்யம்படி துணையாகப் பெற்றுக் கொள்ளலாம். திருச்சிக் கோட்டையை முற்றகையிட்ட மகம்மதிய சிப்பாய்களின் தாக்கதலைவிடக் கள்ளர்களின் தாக்குதலுக்கே மிக நடுங்கினரென்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்" என்று , திருச்சி ரெவரெண்டு காஸ்டெட்ஸ் கூறியிருக்கின்றனர். புதுக்கோட்டைச் சரிதத்தில் இவ்வரலாறுகள் காணப்படுகின்றன.

தொடரும் ........20

1மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger நல்லவன்

நன்று

 

Post a Comment

<< முகப்பு