அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

2-ந்தேதி பெரிய பூகம்பம்


சென்னை, டிச. 31-

சென்னை பல்கலைக்கழகத் தில் பூமி அமைப்பியல் ஆய்வுத்துறை என்று ஒரு தனித்துறை உள்ளது. இந்த துறை சார்பில் பூமியின் மண் மற்றும் பாறை அமைப்புத் தொடர்பாக அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படும்.

பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் உண்டாகி இருக்கும் மாற்றம் காரணமாக வரும் 2-ந்தேதி பெரிய பூகம்பம் ஏற்படும் என்று இந்த ஆய்வுத்துறை கண்டு பிடித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக ஜியாலஜி துறை பேராசிரியர் என்.வெங்கடநாதன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பூமிக்கு அடியில் உள்ள பிளேட்கள் வேகமாக நகர்ந்து வருகின்றன. இதனால் உலகம் முழுவதும் மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வரும் 2-ந் தேதி (திங்கட்கிழமை) இந்த பூகம்பம் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

இந்த பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர்ஸ்கேல் அளவுபடி 7.0 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகப்படியான தாக்குதலாக இருக்கும் என்பதால் உலகின் பல பகுதிகளில் பூகம்பத்தின் விளைவு உணர முடியும்.

சுமத்ரா தீவின் தென் மேற்கு பகுதியில் மையமாக கொண்டு இந்த பூகம்பம் உருவாகலாம். இந்த பூகம்பம் நிகழ 80 சத வீதம் வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கம் இந்தியாவில் அருணா சலபிரதேசம், இமாச்சல பிர தேசம் மாநிலங்களில் அதிகமாக இருக்கும்.

பூடான், ஜப்பானில் உள்ள ரியூகியூ தீவுகள், நியூசியூனியாவில் உள்ள நியூபிரிட்டன், அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகள் பூகம்பத்தால் பாதிக் கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த பகுதிகளில் பூகம்பத்தின் தாக்கம் 5 முதல் 6 ரிக்டர் ஸ்கேல் வரை இருக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாலை மலர் செய்தி
ஆகா இது வேறா

காரணம் இதுவோ பாருங்கள்

http://www.ennar.blogspot.com/2005/10/blog-post_16.html

4மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி சார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

தங்களின் வலையினைப் பிரமிப்புடன் பார்துக்கொண்டேஉள்ளேன்.ஒவ்வொருப் படைப்பிலும் தங்களது உழைப்பு விளங்குகிறது! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

எனது தந்தையின் பெயரைத் தாங்கி யுள்ளவரே நன்றி தங்களுக்கு எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Post a Comment

<< முகப்பு